Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கானலில் நீந்தும் புதுக்குளப் படகுகள் ! #VikatanPhotoStory

ன் நினைவு தெரிந்தவரை நான் முதன்முதலில் பார்த்துப் பிரமித்த பெரும் நீர்நிலை, 'புதுக்குளம்'. புதுக்குளம் கொடுத்த நாஸ்டாலஜிக் தருணங்களை அசைப்போட்டப்படியே வெவ்வேறு ஊர்களில் பிழைப்பிற்காக ஓடிக்கொண்டிருப்போரை இந்தப் படங்கள் கலங்க செய்திடலாம் பெருநகரங்களைப் பொருத்தவரை வாரவிடுமுறைகளில் மால்களும் மல்டி ப்ளெக்ஸ்'களும் அந்நகர மக்களை ஆரத்தழுவிக் கொள்கின்றன. ஆனால், என் பள்ளிக்கால நினைவுகள் முழுக்கப் புதுக்குளமும் அதன் சுற்றுப்புற நடைபாதையும் அதோடு ஒருங்கிணைந்தப் பூங்காவும் மட்டுமே வாரஇறுதிகளை உயிர்ப்பித்துக் கொடுத்தது. இப்படித்தான், ஒவ்வொரு புதுக்கோட்டை வாசிக்கும். ஆனால், புதுக்குளத்தின் இப்போதைய நிலை என்னவாக இருக்கிறது தெரியுமா!?

 

மிச்சமிருக்கும் ஈரம்

 

புதுக்குளம்

நத்தைகளின்றி தீக்குளிக்கும் சங்குகள்

 

புதுக்குளம்

காய்ந்த குளத்தில் கரைசேராப் படகுகள்

 

புதுக்குளம்

செல்ஃபி எடுத்துக்கொள்ள இடங்கள் அதிகரிக்கத்தான் செய்கின்றன 

 

புதுக்குளம்

பட்டமரத்தின் பின்னே கரட்டு நிலமாய் காட்சியளிக்கும் புதுக்குளம்

 

புதுக்குளம்

பாளம் பாளமாய் வெடித்துக் கிடக்கும் கயல் விளையாடிய புதுக்குளம்

 

வறண்ட குளத்தின் கரையில் உறங்கும் நாயின் நிழல்

புதுக்குளம்

வற்றிய குளத்திற்கு ஆறுதலாய் பூத்திருக்கும் எருக்கம் பூக்கள்

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கட்டமைப்புகளுள் முக்கிய நீர்த்தேக்கமாகப் புதுக்குளம் இருந்த காலத்திலும் சரி சிறுவர் பூங்கா, படகு சவாரி எனப் புதுக்கோட்டை நகராட்சி சார்பாகப் பொதுமக்கள் புழக்கத்தில் இருந்த பொழுதிலும் சரி.. இப்படியான நிலை ஒருபோதும் வந்ததில்லை. நாடு முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் எப்போதைக்குமான வறட்சி நிறைந்த மாவட்டமான புதுக்கோட்டையில் இது சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், ஒட்டுமொத்த நிலப்பரப்பின் வாழ்வாதாரம் குறித்த கேள்வி நம்முன் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.                   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement