Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகப் புகைப்பட தினம்! விகடன் புகைப்படக் கலைஞர்களின் ஸ்பெஷல் விஷுவல்ஸ் #VikatanPhotostory

உலகப் புகைப்பட தினமான இன்று, விகடன் புகைப்படக் கலைஞர்களின் ஸ்பெஷல் விஷுவல்ஸ் உங்களுக்காக...

 

VikatanPhotostory

கூத்து, நம் வாழ்வியலை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆதிக் கலை. வளர்ந்துவிட்ட தொழில்நுட்ப யுகத்திலும் கூத்துக் கலையைத் தன் உயிராக நேசிக்கும் கலைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

 

VikatanPhotostory

விநாயகரைப் படைத்த பிரம்மன் இவர்!

 

Vikatanphotostory

பெண் ஒருவர், விவசாயம் செய்ய நீர் இல்லாமல் தரிசாகக் கிடக்கும் நிலத்தில் அமர்ந்து, வான் நோக்கி ஏக்கத்துடன் பார்க்கும் தருணம்!

 

உலக புகைப்பட தினம்

வறட்சியின் வேதனையைத் தன் சிரிப்பில் மறைக்க முயற்சித்தபோது!

 

உலக புகைப்பட தினம்

விவரிக்க வார்த்தைகள் வேண்டுமோ!?

 

உலக புகைப்பட தினம்

குற்றால அருவியை இப்படி ஒரு கோணத்தில் யாருமே பார்த்திருக்க மாட்டோம்தானே!?

 

உலக புகைப்பட தினம்

நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்னர், புகைப்படக் கலைஞருக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம்தான் இந்தத் தோரணம்.

 

உலக புகைப்பட தினம்

அதிகாலை சூரிய உதயத்தைப் பார்க்க முடியாதவர்கள், அதை இப்படியும் தரிசிக்கலாம்!

 

உலக புகைப்பட தினம்

தங்களுக்கு இனிப்பு கிடைத்த மகிழ்ச்சியை, அதைவிட இனிப்பான புன்னகையால் நம்மிடம் பகிர்ந்துகொண்ட அற்புத நொடி!

 

உலக புகைப்பட தினம்

சாலைகள் மற்றும் தெருக்கள் துண்டிக்கப்பட்டு, சென்னை முழுவதும் முடங்கியபோது,

இறந்தவரை மயானத்துக்குக் கொண்டுசெல்வதுகூட பெரும் போராட்டமானது.

 

உலக புகைப்பட தினம்

தங்களது இந்தியப் பயணத்தை முடித்துக்கொண்டு சொந்த ஊருக்குக் கிளம்பும் பிளிக்கான் பறவைக் கூட்டம்

 

உலக புகைப்பட தினம்  

ஊர் எல்லையில் தனித்துக் காவல்காக்கும் அய்யனார்

 

உலக புகைப்பட தினம்

இரவு 1மணிக்கு, மைனஸ் இரண்டு டிகிரி குளிரில், காற்றும் பௌர்ணமி நிலவையும் தவிர யாரும் இல்லாத பாங்காங் ஏரியில்,

நம் புகைப்படக் கலைஞர் எடுத்த படம்!

 

உலக புகைப்பட தினம்

காலச் சக்கரம்!

 

உலக புகைப்பட தினம்

குழந்தைகளின் சிரிப்பு, கடவுளின் தரிசனத்துக்கு மேலானதுதானே!?

 

உலக புகைப்பட தினம்

இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட இளம் சிறுவனுக்காக, சிறுமி ஒருத்தி மெழுகுவத்தியை ஏந்தி நின்ற கலங்கவைக்கும் தருணம் இது!

 

உலக புகைப்பட தினம்

கூடங்குளத்தில் நிறம் மாறிய கடல்!

 

உலக புகைப்பட தினம்

மெல்லிய சூரிய வெளிச்சத்தில், கேரள சினிமாவின் பிதாமகன் அடூர் கோபாலகிருஷ்ணன்

 

உலக புகைப்பட தினம்

ஜல்லிக்கட்டு தடையின்போது சிராவயலில் சீறிப் பாய்ந்த காளைகள்

 

உலக புகைப்பட தினம்

தங்கை பள்ளிக்குப் புதியவள்... மிரட்சியோடு அழுதுகொண்டிருக்கும் தங்கையின் கண்ணீரை

இடதுகையால் துடைத்துக்கொண்டே தேற்றும் தருணம்! 

 


 

 

உலக புகைப்பட தினம்

உழைப்பும் உப்பும்!

 

உலக புகைப்பட தினம்

உயிரைப் பணயம்வைத்து மீன் பிடிக்கக் கிளம்பும் மீனவர்கள்!

 

உலக புகைப்பட தினம்

நமக்கு சோறு படைக்க உச்சிவெயிலில் உழைத்துக்கொண்டிருக்கிறார்!

 

உலக புகைப்பட தினம்

'டிஜிட்டல் இந்தியா... மேக் இன் இந்தியா' என்று விதவிதமாக முழங்கும் நம் நாட்டில், ஒரு சாராசரி ஏழைக்குக் கிடைக்கும் மருத்துவம் இப்படித்தான் இருக்கிறது!

 

உலக புகைப்பட தினம்

யானை மிதித்து  இறந்துவிட்ட தன் அம்மாவுக்காக, ஒரு மகளின் கதறல் இது!

 

உலக புகைப்பட தினம்

தான் பெற்ற அனுபவங்களைப் பேரனுக்குச் சொல்லித்தரும் தாத்தாக்களின் உலகம் அற்புதமானது.

அந்த அற்புத உலகிற்கான வழித்தடம்தான் இந்தப் படம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement