வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (15/12/2017)

கடைசி தொடர்பு:20:15 (15/12/2017)

ஹனிமூனில் இருக்கும் விராட்-அனுஷ்கா ஜோடி: வைரலாகும் இன்ஸ்டா போட்டோ

அனுஷ்கா

ந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி - பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் திருமணம்தான் இந்த வாரத்தின் டாக் அப் தி டவுன். இந்த நிலையில், ஹனிமூனில் இருக்கும் ஒரு புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் அனுஷ்கா ஷர்மா.  

இத்தாலியில் உள்ள டஸ்கனி ரிசார்ட்டில், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ, கடந்த 11-ம் தேதி, விராட் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் திருமணம் செய்துகொண்டனர். இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான சீரிஸ் தொடங்கவிருப்பதால், திருமணம் முடிந்தவுடன், இருவரும் தென்னாப்பிரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது அனுஷ்கா ஷர்மா தன் இன்ஸ்டாகிராமில், இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டிருக்கிறார். இந்தப் போட்டோ வெளியான 20 நிமிடங்களில்  இரண்டு லட்சம் பேர் லைக்ஸ் செய்தனர். மேலும், அனுஷ்கா, “சொர்க்கத்தில் இருக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார். ஆனால், அவர் எங்கு இருக்கிறார் என்பதை பதிவிடவில்லை. ஆனால், அவரின் ரசிகர்கள் பலரும் “இது இத்தாலியா?” பின்லாந்தா அல்லது ‘ஸ்விட்சர்லாந்தா’ என கமென்ட்களில் கேட்டிருக்கின்றனர்.  

இவர்களின் திருமண வரவேற்பு விழா, வரும் 21-ம் தேதி டெல்லியிலும் வரும் 26-ம் தேதி மும்பையிலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க