சற்றும் தாமதிக்காமல் எம்.எல்.ஏ-வை திருப்பி அறைந்த `தில்’ பெண் போலீஸ்! #Video

viral video

இமாசலப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இதுகுறித்து ஆலோசிக்க இமாசல தலைநகர் ஷிம்லாவில் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். 

கூட்டம் நடைபெற்ற இடத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆஷா குமாரியை உள்ளேவிடாமல் போலீஸ் தடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஆஷா குமாரி பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் போலீஸைக் கன்னத்தில் அறைந்தார். சற்றும் யோசிக்காத அந்தப் பெண் போலீஸ் எம்.எல்.ஏ-வை திருப்பி கன்னத்தில் அறைந்தார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரல்! 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!