வெளியிடப்பட்ட நேரம்: 17:21 (24/01/2018)

கடைசி தொடர்பு:17:28 (24/01/2018)

தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுத்த வாலிபருக்கு நிகழ்ந்த விபரீதம்..!

தெலுங்கானா மாநிலத்தில் ஓடும் ரயிலின் முன்பு செல்ஃபி எடுக்க முயற்சி செய்த வாலிபர் மீது ரயில் மோதியது. அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகிவருகிறது. 

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சிவா. அவர், கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர், பாரத் நகர் ரயில் நிலையத்துக்கு சற்றுத் தொலைவில் ரயில் வந்துகொண்டிருக்கும் தண்டவாளத்தின் அருகில் நின்று செல்ஃபி வீடியோ எடுத்துள்ளார். தொலைவிலிருந்து வரும் ரயில், அருகில் வரும்வரை தொடர்ச்சியா வீடியோ எடுத்துள்ளார். அவர், வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும்போதே ரயில் அவர் மீது மோதியது. ரயில், அவர்மீது மோதுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. பலத்த காயமடைந்த அவர், ரயில்வே காவல்துறையினர் அருகிலிருந்த மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அவர், தற்போது நலமாக இருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.