வெளியிடப்பட்ட நேரம்: 15:47 (07/03/2018)

கடைசி தொடர்பு:15:51 (07/03/2018)

`நான் சந்தோஷமா இல்ல; திரும்ப வந்திருங்கம்மா!' - பிறந்தநாளில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி உருக்கம்

ஜான்வி

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி முதியோர் இல்லத்தில்  பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஸ்ரீதேவி, குளியல் தொட்டியில் மூழ்கி கடந்த 24-ம் தேதி உயிரிழந்தார். ஸ்ரீதேவியின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிப்ரவரி 28 அன்று இந்தியாவுக்கு எடுத்துவரப்பட்ட ஸ்ரீதேவியின் உடல், மார்ச் 1-ம் தேதி முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ஸ்ரீதேவியின் மகள்களுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் ஆறுதல் தெரிவித்தனர்.

 


ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்விக்கு நேற்று 21 வது பிறந்தநாள். இன்ஸ்டாகிராமில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. ஸ்ரீதேவி தன் பிறந்தநாளை முதியோர் இல்லத்தில் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். தன் அம்மாவின் பாணியில் ஜான்வியும் தன் பிறந்தநாளை முதியோர் இல்லத்தில் கொண்டாடியுள்ளார்.

ஜான்வி

 

முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடிய ஜான்விக்கு வீட்டில் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் கபூர் குடும்பத்தினர். போனி கபூரின் சகோதரர் சஞ்சய் கபூர் ஜான்வி பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஜான்வி தன் இன்ஸ்டாகிராம் பதிவில் ‘பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. ஆனால், நான் மகிழ்ச்சியாக இல்லை. அம்மா ப்ளீஸ் திரும்ப வாங்க’ என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க