`யோகா செய்யும் மோடி!’ - வைரலாகும் 3டி அனிமேஷன் வீடியோ

நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி வரும் பிரதமர் மோடி, ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதற்காக, தன்னை யோக பயிற்சியாளராக வடிவமைத்துள்ளார். யோகாசனங்களைக் கற்றுத்தரும் விதமாக, அவரின் 3டி அனிமேஷன் யோகா பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட உள்ளார். 

மோடி யோகா

இன்று மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றுகையில் இதைக் குறிப்பிட்டு பேசினார். அதில், 'தூய்மையான இந்தியா எப்படி முக்கியமோ, அதேபோல் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதும் மிகவும் முக்கியம். சுகாதார வளர்ச்சியில் யோகா உலகளவில் முக்கியத்துவம் பெற்றதுமட்டுமல்லாமல் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்திலும் யோகா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச யோகா தினத்தை வரும் ஜூன் 21-ம் தேதி அன்று கொண்டாட உள்ளோம். கடந்த மூன்று ஆண்டுகளாகச் சர்வதேச யோகா தினத்தில், நம் நாடு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். நான் யோகா ஆசிரியர் அல்ல. ஆனால், நான் யோகா பயிற்சியாளர். 

மோடி

இன்னும் சிலர், அவர்களது படைப்புத்திறன் மூலம் என்னை ஒரு யோகா ஆசிரியராகவும், எனது யோகா நடைமுறைகளை 3டி அனிமேஷன் வீடியோவாக தயார் செய்துள்ளார்கள். விரைவில் அதை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அதனால், நாம் யோகாசனங்கள் மற்றும் பிராணயாமாங்களை ஒன்றாகச் செய்யலாம்' எனத் தெரிவித்தார். 

தற்போது, திரிகோனசானா எனப்படும் முக்கோண யோகாசனத்தை எவ்வாறு செய்வது எனும் பயிற்சியை வழங்கும் மோடியில் 3டி அனிமேஷன் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!