'காவிரிக்காக அழுது புலம்பிக்கொண்டே இருங்க!' - சுப்ரமணியன் சுவாமி ட்வீட்

தமிழக மக்களுக்குக் காவிரி தண்ணீர்தான் வேண்டும் என்றால், அழுது புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

சுப்ரமணியன் சுவாமி


காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்திய அரசு அலட்சியமாக இருந்துவந்த நிலையில், மத்திய அரசு மீது  தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. மத்திய அரசும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசம் வேண்டும் என்று கூறி, தீர்ப்பில் குறிப்பிட்ட 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

மத்திய அரசின் இந்தச் செயல் தமிழக மக்கள், அரசியல் கட்சியினர், விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், தமிழகத்தில் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தி.மு.க, நாம் தமிழர், ஆம் ஆத்மி, இளைஞர் அமைப்பு, விவசாயிகள் அமைப்பு எனப் பலரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 

சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

இந்தநிலையில், பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழக மக்களுக்குத் தண்ணீர் வேண்டும் என்றால், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் உதவ நான் தயார். காவிரி நீர் தான் வேண்டும் என்றால் அழுது புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்' என பதிவிட்டுள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!