கேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டாம்பூச்சியாய் மின்னிய ஐஸ்வர்யா ராய்..!

ஐஸ்வர்யா

பிரான்சில் 2018-ம் ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக அவர் அணிந்துவந்த ஆடை பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் பேச்சு. 

ஐஸ்வர்யா ராய்
 

இது ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளும் 17-வது கேன்ஸ் திரைப்பட விழா. இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பட்டாம்பூச்சிகள் வரிசைப்படுத்தப்பட்ட மெர்மெய்ட் கவுனில் மிகவும் அழகாகத் தோன்றினார். அதிலும், ரெட் கார்ப்பெட்டை அலங்கரித்தவாறு ஐஸ்வர்யா நடந்து வந்த தோரணை அனைவரது கண்களையும் பிரமிக்கச் செய்தது. 

கேன்ஸ்

தனது மகள் ஆராத்யா பிறந்த சமயத்தில் நடந்த கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட  ஐஸ்வர்யா ராயின், லிப்ஸ்டிக் கலர், உடல் எடை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களை வைத்து அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். 

கேன்ஸ்ஐஸ்வர்யா

ஆனால், இந்த ஆண்டு விழாவில் தன் மீது எழுந்த விமர்சனங்களை மறக்கச்செய்தது மட்டுமல்லாமல், `ஐஸ்வர்யாவுக்கு நிகர் ஐஸ்வர்யாதான்' என சொல்லும்படி செய்துவிட்டார். மீண்டும் ஒருமுறை ரெட் கார்ப்பெட்டில் பவனி வரமாட்டாரா என ஏங்க வைத்துவிட்டார். ஐஸ்வர்யா தனது மகள் ஆராத்யாவுடன் விழாவில் கலந்து கொண்டபோது எடுத்துக்கொண்ட வீடியோ காட்சியும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புகில் வெளியாகி, தற்போது வைரலாகி வருகிறது. 

 


PC - DC and AP

Do you like the story?

Please Appreciate the Author by clapping!