சதம் அடித்த உற்சாகம்... விராட் வெளிப்படுத்திய காதல்... இது! - வைரல் வீடியோ

சதம் அடித்த உற்சாகத்தில் மைதானத்திலேயே தன் காதலை தன் மனைவியிடம் வெளிப்படுத்தி இருக்கிறார் கேட்பன் விராட் கோலி. 

விராட்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் தொடக்கம் சற்று தடுமாறியது. 50 ரன்கள் சேர்ந்த நிலையில், முரளி விஜய் ஆட்டமிழக்க, அடுத்து இறங்கிய தவான் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால், இந்திய அணியின் ரன்வேகம் சரிந்தது. இதையடுத்து, களமிறங்கிய கேப்டன் விராட் கோலி தனி ஆளாக நின்று அபாரமாக ஆடினார். 225 பந்துகளில் 149 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனிடையில், பவுண்டரி அடித்து 101 ரன் எட்டிய விராட் கோலி, உற்சாகத்தில் தனது மனைவி அனுஷ்கா ஷர்மா நின்று கொண்டிருந்த திசையை நோக்கி, தன் கழுத்தில் அணிந்திருந்த திருமண மோதிரத்தை வெளியில் எடுத்து முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினார். இதன் மூலம், சாதனைச் சதத்தை தனது மனைவிக்குச் சமர்ப்பித்தார் விராட். மைதானத்திலேயே தனது காதலை வெளிப்படுத்திய விராத்தின் செயலை, பார்வையாளர்கள் அறையில் நின்றிருந்தபடி ரசித்த அனுஷ்கா கைதட்டி மகிழ்ந்தார். கோலி, தனது அன்பை வெளிப்படுத்தும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரண்ட் ஆகி வருகிறது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!