`கேப்டன் கூல் நல்லவரா? கெட்டவரா?’ - ஸிவா தோனியின் ஸ்மார்ட் பதில்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி நல்லவரா? கெட்டவரா? என்ற கேள்விக்கு அவரின் மகள் ஸிவா மிகவும் புத்திசாலித்தனமாகப் பதிலளித்துள்ளார். 

ஸிவா தோனி

ஸிவா தோனி என்றால் தெரியாதவர்களே கிடையாது. அவருக்கு எனத் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஸிவாவுக்கென தனி சமூகவலைதள பக்கங்கள் உள்ளன. அதில் பெரிய பிரபலங்களுக்கு உள்ள ஃபாலோ வர்ஸ் போலவே இவருக்கும் அதிக ஃபாலோவர்ஸ் உள்ளனர். அவ்வப்போது ஸிவா செய்யும் சேட்டைகளை தோனி இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார். அது அனைவர் மனதையும் ஈர்த்து பெரிய ஹிட் ஆகும். இதேபோல் தற்போதும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் தோனி. 

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருவதால் கிரிகெட் வீரர் தோனி தன் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். ஓய்வு நேரத்தில் தன் மகள் ஸிவாவுடன் விளையாடும் தோனி மகள் இடும் கட்டளைகளைச் செய்கிறார். அப்போது தோனியின் மனைவி ஷாக்ஷி ‘ அப்பா நல்லவரா, கெட்டவரா? எனக் குழந்தையிடம் கேட்கிறார். அதற்கு அப்பா மட்டுமல்ல அனைவருமே நல்லவர்கள் தான்’ எனப் புத்திசாலித்தனமாக பதிலளிக்கிறார் ஸிவா. 

‘வெரி ஸ்மார்ட்’ என்ற கேப்சனுடன் இந்த வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கேப்டன் கூல். எப்போதும் போல இந்த வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!