வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (25/08/2018)

கடைசி தொடர்பு:19:10 (25/08/2018)

`சாலையில் சுற்றித்திரிந்த சிங்கம்...'- கர்ஜனையால் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்! #viralvideo

குவைத்தில் சிங்கம் ஒன்று சாலையில் சுற்றித்திரியும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

சிங்கம்

குவைத், கபட் (kabad) மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த 22-ம் தேதியன்று பெரிய சிங்கம் ஒன்று ஜாலியாக சுற்றித் திரிந்திருக்கிறது. அதோடு, அந்தச் சாலை வழியில் சென்ற வாகன ஓட்டிகளையும் தனது கம்பீர கர்ஜனையால் மிரள வைத்திருக்கிறது. இதையடுத்து, காவல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

தகவலை அடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், சுற்றுச்சூழல் அதிகாரிகள் மற்றும் அல்-நஜ்தா போலீஸார் சிங்கத்தைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பல நேரப் போராட்டத்துக்குப் பிறகு ஒருவழியாகச் சிங்கத்தை பத்திரமாகப் பிடித்து உயிரியல் பூங்காவில் விட்டுள்ளனர். 

குவைத் போலீஸார்

Photo Credit - twitter/@Almajlliss

எப்படி, இந்த சிங்கம் பொதுவழியில் வந்தது என போலீஸ் அதிகாரிகளுக்குத் தற்போதுவரை தெரியவில்லை. இருப்பினும், இந்த சிங்கத்தை செல்லப் பிராணியாக யாரேனும் வளர்த்திருக்கலாம். அவர்களிடம் இருந்து சிங்கம் தப்பித்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேவேளையில், இதுவரை யாரும் அந்த சிங்கத்துக்கு சொந்தம் கொண்டாடவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

கபட் சாலையில் வாகன ஓட்டிகளிடம் சிங்கம் செய்யும் லூட்டி வீடியோவும், பிடிக்கப்பட்ட சிங்கத்துடன் அதிகாரிகள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக உலா வருகிறது.