வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (11/09/2018)

கடைசி தொடர்பு:17:40 (11/09/2018)

நடனம் மூலம் டிராஃபிக் கன்ட்ரோல் செய்யும் காவலர்! - வைரலாகும் வீடியோ

நடன அசைவுகள் மூலம் போக்குவரத்தை சரி செய்து வருகிறார் ஒடிசாவை சேர்ந்த பாதுகாப்புக் காவலர் ஒருவர். இவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. 

காவலர்

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்தவர் 33 வயதான பிரதாப் சந்திர கந்த்வால். வீட்டுக் காவலரான இவர், தற்போது போக்குவரத்தை சீரமைக்கு பணியைச் செய்து வருகிறார். அனைவரைப்போல் இவரும் சாதாரணமாக வேலை செய்யாமல் தன் தனிப்பட்ட நடன அசைவுகள் மூலம் போக்குவரத்தை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த நடனத்தால் மக்களின் கவனம் முழுவதும் இவரை நோக்கியே உள்ளது. இதனால் அனைவரும் போக்குவரத்து விதிகளை மதித்துச் செல்கின்றனர். 

இது பற்றி பேசிய பிரதாப், “நான் சொல்ல நினைக்கும் விசயங்களை என் நடன அசைவுகள் மூலம் மக்களுக்குத் தெரிவிக்கிறேன். என் ஸ்டைலால் மக்கள் ஈர்க்கப்பட்டு போக்குவரத்தை மதித்துச் செல்கின்றனர். நடனம்தான் என் வேலையைச் சிறப்பாகவும் தனித்தன்மையுடனும் செய்ய உதவுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

பிரதாப்பின் இந்த நடனம் புவனேஷ்வர் மக்கள் மட்டுமல்லாது இந்திய மக்களையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோ, சமூக வலை
தளங்களில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.