வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (01/12/2018)

கடைசி தொடர்பு:19:30 (01/12/2018)

யூடியூபையே மிரள வைத்த 'thank you, next' ஆல்பம் பாடல்!

பிரபல அமெரிக்க பாடகியான அரியானா கிராண்டேவின் 'thank you, next' பாடலின் வீடியோ நேற்று வெளியானது. வெளியானதிலிருந்து பல சாதனைகளை முறியடித்து வருகிறது இந்தப் பாடல் வீடியோ. வெளியான சுமார் 15 மணி நேரத்தில் சுமார் 40 மில்லியன் வியூஸை நெருங்கிவிட்டது. தற்போது யூடியூபில் வந்துள்ள புதிய ப்ரீமியர் (Premiere) வசதியில் வெளியான இந்தப் பாடலை வெளியாகும்போது ஒரே நேரத்தில் 8.29 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  லைவ்வாக பார்த்ததாகத் தெரியவந்துள்ளது. மேலும், இவ்வளவு பேர் ஒரே நேரத்தில் பார்த்ததால் கமென்ட் வசதியே செயலிழந்துவிட்டதென நெட்டிசன்கள் தெரிவித்தனர்.

யூடியூப்

இதை யூடியூப் தளமும் ஒப்புக்கொண்டு ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளது. அதில் 'அரியானா கிராண்டேவின்  'thank you, next' பாடல் இணையத்தையே உலுக்கும் அளவுக்கு மிகவும் நன்றாக இருக்கிறது. குறைந்தபட்சம் எங்கள் தளத்தின் கமென்ட்ஸ் பகுதியையாவது பாதித்துள்ளது' என்றது யூடியூப். மேலும் கமென்ட் பகுதி செயலிழக்கவில்லை, அதில் கருத்துகள் பதிவாவதற்குத்தான் தாமதம் ஆகிறது என்றும் விளக்கமளித்தது. லிரிக் வீடியோ வெளியான இந்தப் பாடல் ஏற்கெனவே அமெரிக்காவின் சார்ட்பீட்களில் முதல் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் காதலர்களுக்கு சமர்ப்பணமாக அரியானா வெளியிட்டுள்ள இந்த பாடல் முன்பு யூடியூப் வைரல் பாடல்களான 'Gangnam Style', 'Despacito', 'Shape of you' போன்றவற்றின் சாதனைகளை எளிதாகத் துவம்சம் செய்துவிடும் என்கின்றனர் இதன் ரசிகர்கள்.  

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க