`197 நாள்களுக்குப் பிறகு தரையில் நடந்தால் எப்படி இருக்கும்?' - விண்வெளி வீரரின் நடைபழகும் வீடியோ | Astronaut share video of struggles to walk after long time in space

வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (27/12/2018)

கடைசி தொடர்பு:07:34 (27/12/2018)

`197 நாள்களுக்குப் பிறகு தரையில் நடந்தால் எப்படி இருக்கும்?' - விண்வெளி வீரரின் நடைபழகும் வீடியோ

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பிய விண்வெளி வீரர் ஒருவர், நீண்ட நாள்களுக்குப் பிறகு அவர் நடக்கும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

விண்வெளி வீரர் - Andrew J. Feustel

அமெரிக்க விண்வெளி வீரரான Andrew J. Feustel என்பவர், 197 நாள்கள் விண்வெளியில் தங்கியிருந்தார். இவருடன் மற்ற இரண்டு விண்வெளி வீரர்களும் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி பத்திரமாக பூமிக்குத் திரும்பினர். அதற்கு அடுத்த நாள், அவர் எப்படி நடந்தார் என்பதை அவரின் மனைவி வீடியோவாகப் பதிவுசெய்திருந்தார். அந்த வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், முதல் முறையாக நடைபழகும் குழந்தையைப் போல அடியெடுத்து வைக்கிறார். அவர் கீழே விழாமல் இருப்பதற்காக அவரைத் தாங்கிப் பிடித்துக்கொள்வதற்காக இரண்டு பேர் அருகில் இருக்கின்றனர். கடந்த 20-ம் தேதி பூமிக்குத் திரும்பிய மற்ற விண்வெளி வீரர்களை வரவேற்றிருக்கிறேன் என்றும், அவர்கள் என்னைவிட சிறப்பாக இருப்பார்கள் என நம்புகிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில், விண்வெளி வீரர்கள் நீண்ட காலம் தங்கியிருந்து பல்வேறு பணிகளில் ஈடுபடுவார்கள். அங்கே புவியீர்ப்பு விசை இருக்காது என்பதால், அந்தச் சூழ்நிலைக்கேற்ப உடல் பழகியிருக்கும். எனவே, அவர்கள் பூமிக்குத் திரும்பியவுடன் அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றாலும், உடல் உறுப்புகளின் இயக்கங்கள் இயல்பு நிலைக்கு வருவதற்கு சில காலம் ஆகும்.