நாய்க்குட்டி தலையில் பாய்ந்த அம்பு... அறுவை சிகிச்சையால் உயிர்பிழைத்த ஆச்சர்யம்! #ViralVideo | Puppy in US survives after being shot with an arrow

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (24/01/2019)

கடைசி தொடர்பு:18:35 (24/01/2019)

நாய்க்குட்டி தலையில் பாய்ந்த அம்பு... அறுவை சிகிச்சையால் உயிர்பிழைத்த ஆச்சர்யம்! #ViralVideo

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த Paws and Claws Animal Clinic என்னும் கால்நடை மருத்துவமனைக்கு பரபரப்பாக எடுத்துச்செல்லப்பட்டது லோகா என்னும் நாய்குட்டி. தலையில் அம்பு பாய்ந்தபடி விழுந்துகிடந்த நாய்க்குட்டியைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அவசர அவசரமாக எடுத்துவந்திருந்தனர் அதன் உரிமையாளர்கள். லோகோவை ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே மூலம் பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள் வியப்புக்குள்ளாகியுள்ளனர். தலைவழியே பாய்ந்த அம்பு சரியாக மூளை, தண்டுவடம், தொண்டை என எதையும் பாதிக்காமல் தவறிச் சென்றுள்ளது.

நாய்க்குட்டி

தற்போது சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு லோகோ மீண்டுவருகிறது. அதன் உடல்நிலை சீராக உள்ளதால் விரைவில் வீட்டுக்குத் திரும்பும் என்று அந்த கிளினிக் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வை ஃபேஸ்புக்கில் அந்த கிளினிக் பதிவிட மக்கள் அனைவரும் தங்களது பிரார்த்தனைகள் மற்றும் அனுதாபங்களைத் தெரிவித்துவருகின்றனர். பலர் இந்த வாயில்லாத ஜீவன் மீது இதைப் போன்ற கொடூர செயலை எப்படிச் செய்யமுடிகிறது என தங்கள் கோபத்தையும் வெளிப்படுத்தினர். இதன்பின் அக்கறை கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவித்து மீண்டுவரும் லோகோவின் வீடியோ ஒன்றை அந்த கிளினிக் பதிவிட இது தற்போது வைரல். யார் இந்த நாய்க்குட்டியின் மீது அம்பு விட்டனர் என்பது இதுவரை தெரியவில்லை. அந்த ஊரின் காவல்துறையும் அது யார் என்று தீவிரமாக துப்பு துலக்கிவருகிறது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க