'உறைந்துபோன உலகின் இரண்டாவது பெரிய ஏரி' - வைரலாகும் புகைப்படங்கள்! | The world's second largest lake is now frozen! Viral Images

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (01/02/2019)

கடைசி தொடர்பு:05:00 (01/02/2019)

'உறைந்துபோன உலகின் இரண்டாவது பெரிய ஏரி' - வைரலாகும் புகைப்படங்கள்!

தற்போது அமெரிக்கா வரலாறு காணாத குளிரைப் பார்த்துவருகிறது. சில இடங்களில் -40 டிகிரி செல்சியஸிற்கும் கீழ் வெப்பநிலை குறைந்துள்ளது. அமெரிக்காவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக சிகாகோவும் இதற்கு விதிவிலக்கல்ல. சராசரி வெப்பநிலை சுமார் -17 டிகிரி இருக்க அங்கு இருக்கும் மிச்சிகன் ஏரி முழுவதுமாக உறையத்தொடங்கியுள்ளது. கொள்ளளவை வைத்துப் பார்த்தால் இதுதான் உலகின் இரண்டாவது ஏரி என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதும் துருவங்களில் இருக்கும் 'polar vertex' கீழிறங்கி அமெரிக்காவில் மையம் கொண்டுள்ளதுதான் இந்த திடீர் மாற்றத்திற்குக் காரணமாம். இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் உயிர்களும் பலியாகியுள்ளன.

மிச்சிகன் ஏரி

P.C: twitter.com/DavidPFunk/status/1090665373458944000/

உறைந்திருக்கும் இந்த மிச்சிகன் ஏரியை அந்த ஊர் மக்கள் போட்டோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்ற வைரலாக பரவிவருகின்றன இந்த போட்டோக்கள். இந்த போட்டோக்களில் உறைந்த ஏரியின் மேலிருந்து மூடுபனி கிளம்புவதுவரை பதிவாகியுள்ளது. 'The Day After Tomorrow' என்ற ஹாலிவுட் படத்தில் உலகம் அழியும் பொழுது எப்படி அமெரிக்கா உறைந்திருக்கும் என காட்சிப்படுத்தப்பட்டிருக்கும், அதே போல்தான் இப்போதைய காட்சிகள் இருக்கிறதென்று ட்விட்டரில் திகில் கிளப்பிவருகின்றனர் மக்கள்.

மிச்சிகன்

உறைந்திருக்கும் மிச்சிகன்

Michigan vs Day after Tommorow

மேலே:'The Day After Tomorrow' கீழே: இன்றைய மிச்சிகன்

P.C: twitter.com/AmandaJanalis/status/1090816348853293056/

இதுமட்டுமல்லாமல் கனடா அமெரிக்கா எல்லையில் உள்ள புகழ்பெற்ற அருவியான நயாகராவும் உறைந்தே காட்சி அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் புயல், வெள்ளம், காட்டுத்தீ என பெரும் பேரிடர்கள் பலவற்றை அமெரிக்கா சந்தித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது உலகமெங்கும் மனிதர்களின் செயல்களால் நடக்கும் காலநிலை மாற்றத்தை எடுத்துரைப்பதாக அமைத்துள்ளது என்கின்றனர் பலரும்.

நயாகரா

நீங்க எப்படி பீல் பண்றீங்க