கடந்த வாரம் இந்தியாவில் அமெரிக்க பாடகி ஜூலியா மைக்கேல்ஸ் திடீரென டிரெண்ட் ஆகத் தொடங்கினார். காரணம் என்ன தெரியுமா? இன்ஸ்டாகிராமில் இவர் ஒரு போட்டோவை பதிவிட நம் இந்தியர்கள் பலரும் 'நீங்க பார்க்க அப்படியே அனுஷ்கா ஷர்மா மாதிரி இருக்கீங்க' என்று கமெண்ட்களை கொட்டியுள்ளனர். இது மட்டுமல்லாமல் அனுஷ்கா ஷர்மா, விராட் கோலியையும் தொடர்ந்து டேக் செய்தும் உள்ளனர். இது அப்படியே மற்ற சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பரவியது. மீம்ஸ், வீடியோ என இது தொடர்பான விஷயங்கள் அனைத்தும் லைக்ஸை அள்ளின. இதைக் கவனித்த ஜூலியா மைக்கேல்ஸ் ட்விட்டரில் தற்போது ஒரு ட்வீட்டை பதிவுசெய்துள்ளார்.
அதில் 'நம்ம உண்மையிலேயே இரட்டையர்கள்தான் போல' எனக் கலகலத்துள்ளார் அவர். இதற்கு அனுஷ்கா ஷர்மா ஜாலியாக பதிலும் அளித்துள்ளார். `ஆமா, உங்களையும் மீதி இருக்குற அந்த 5 பேரையும்தான் இவ்வளவு நாளா தேடிட்டு இருந்தேன்' என ட்வீட் செய்துள்ளார். இப்படி இவர்கள் பேசிக்கொள்ள இப்போது இது வைரல்.
ஏற்கெனவே மீம், போட்டோவென ஷேர் செய்துவந்தவர்கள் மேலும் குஷியாகியுள்ளனர். இதுதொடர்பாக மக்கள் பதிவிட்டுள்ள சில பதிவுகளையும் கீழே பார்க்கலாம்.
@AnushkaSharma's Doppelganger is @juliamichaels!!
