வின்டர் வந்தாச்சு... வெளியானது கேம் ஆஃப் த்ரோன்ஸ் புதிய படங்கள் #Viral | Game of thrones new stills are out

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (07/02/2019)

கடைசி தொடர்பு:13:10 (07/02/2019)

வின்டர் வந்தாச்சு... வெளியானது கேம் ஆஃப் த்ரோன்ஸ் புதிய படங்கள் #Viral

பிரபல ஆங்கில தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸின் கடைசி சீசனுக்காக அதன் ரசிகர்கள் ஏற்கெனவே வெறித்தன வெய்ட்டிங்கில் இருக்கின்றனர். இந்த வருடம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என்று HBO அறிவிக்க யார் அயர்ன் த்ரோனில் அமர்வார் என ஏற்கெனவே கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஃபீவர் அனைவரையும் தொற்றிக்கொண்டுள்ளது. இரண்டு டீஸர்கள் இதுவரை வெளிவந்திருந்தபோதிலும் எதுவும் புதிய சீசனில் வரும் காட்சிகளில் இருந்து எதையும் காட்டவில்லை (HBO 2019-க்கான ப்ரோமோவில் வந்த ஐந்து விநாடி காட்சியைத் தவிர). மாறாக உவமையாக தனியாக இதற்காகவே படம்பிடிக்கப்பட்ட காட்சிகளே இந்த டீஸர்களில் இடம்பெற்றிருந்தன. நிலை இப்படி இருக்க தற்போது கடைசி சீசனின் ப்ரோமோவாக பல புதிய ஸ்டில்களை தங்கள் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளது HBO நிறுவனம். இதில் முன்னணி கதாபாத்திரங்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ்

GOT

P.C. HBO

GOT3

அன்று, இன்று

இந்த ஸ்டில்களை ரசிகர்கள் ஷேர், ரீட்வீட் என அனைத்து சமூகவலைதளங்களிலும் தெறிக்கவிட தற்போது உலகமெங்கும் வைரல் ஆகியுள்ளது இந்த ஸ்டில்கள். நெட்டிசன்கள் பலரும் இந்தப் புதிய ஸ்டில்களில் இருக்கும் கதாபாத்திரங்கள் முதல் சீசனில் எப்படி இருந்தனர் என ஒப்பிட்டு அதை வியப்புடன் ஷேர் செய்துவருகின்றனர். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக இன்னும் பல ஸ்டில்கள், டீஸர் மற்றும் டிரெய்லர் வரும் மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6 எபிசோடுகள் கொண்ட இந்தக் கடைசி சீசன் இந்தியாவில் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும். முதல் 2 எபிசோடுகள் 60 நிமிடங்களும், அடுத்த 4 எபிசோடுகள் 80 நிமிடங்களும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க