'இதில் ஒன்று மறைந்திருப்பது தெரிகிறதா? - இணையத்தைக் கலக்கும் வைரல் போட்டோ! | A viral photo has a Camouflaged Snow Leopard

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (17/05/2019)

கடைசி தொடர்பு:07:00 (17/05/2019)

'இதில் ஒன்று மறைந்திருப்பது தெரிகிறதா? - இணையத்தைக் கலக்கும் வைரல் போட்டோ!

போட்டோ

சில போட்டோக்கள் எடுக்கப்படும் கோணம் சரியாக அமைந்தால் அவை மிகப்பெரிய புதிராக மாறும் வகையில் அமைந்துவிடும். அதைப் பார்க்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் தெரியும். சிலருக்கோ ஒன்றுமே தெரியாது. இதுபோலக் குழப்பத்தை உருவாக்கும், அதுவும் இயற்கை சூழல்களில் எடுக்கப்படும் போட்டோக்களை அதிகம் பார்க்க முடியும். அப்படி ஒரு போட்டோ தற்போது இணையத்தைக் கலக்கிக்கொண்டிருக்கிறது. 

வைரல்

இயற்கை உயிரினங்களுக்கு மறைந்து வாழும் தகவமைப்பைக் கொடுத்துள்ளது. இதன் மூலமாகத் தாக்க வரும் எதிரிகளிடமிருந்து தப்பிக்க விலங்குகளால் சுற்றுப்புறச் சூழலில் மறைந்துகொள்ள முடிகிறது. அப்படி ஒரு தகவமைப்பு திறனைக்கொண்ட ஒரு விலங்குதான் மேலே உள்ள புகைப்படங்களில் மறைந்திருக்கிறது. அதனால் அதைப் பார்த்த உடனே கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை, அதற்குச் சில நொடிகள் தேவைப்படலாம். கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் கில்லாடிதான். முடியவில்லையா கவலையே பட வேண்டாம், இதோ அந்த விலங்கு 'பனிச் சிறுத்தை'

பனிச் சிறுத்தை

சவுரப் தேசாய் என்பவர்தான் பனிச் சிறுத்தை அடங்கிய இந்தப் படத்தை எடுத்தவர். இமாசலப் பிரதேசத்தில் உள்ள ஸ்பிட்டி பள்ளத்தாக்குப் பகுதியில்தான் இந்தப் போட்டோ எடுக்கப்பட்டிருக்கிறது. "Art of camouflage" என்று குறிப்பிட்டு இதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் சவுரப் தேசாய்.