பல வருடங்கள் கழித்து நண்பர்களை சந்தித்து உருகிய ஜாக்கி சான்! | Jackie chan was given sweet shock by his JC stunt team members

வெளியிடப்பட்ட நேரம்: 01:15 (05/02/2017)

கடைசி தொடர்பு:01:15 (05/02/2017)

பல வருடங்கள் கழித்து நண்பர்களை சந்தித்து உருகிய ஜாக்கி சான்!

ஜாக்கி சான் தனது 'ஜே.சி ஸ்டன்ட் டீம்' உறுப்பினர்களைப் பல வருடங்களுக்குப் பின்னர் பார்க்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரல் ஆகியுள்ளது. அங்கு குழுமி இருந்த பலரும் இந்தக் காட்சியக் கண்டு ஆராவாரம் செய்தனர். புராஜெக்ட் ஏ, ஆர்மர் ஆஃப் காட், போலீஸ் ஸ்டோரி, டிராகன் லார்டு உள்ளிட்ட படங்களில் தனது ஸ்ட்ன்ட் குழுவுடன் ஜாக்கி சான் நடித்த காட்சிககள் விழாவில் திரையிடப்பட்டன. தங்களது வாழ்வில் சகோதரர் ஜாக்கி, என்ன மாற்றங்களைக் கொண்டுவந்தார் என மூத்த ஸ்டன்ட் கலைஞர்கள் ஒவ்வொருவராக விளக்கினர். திடீரென ஸ்டன்ட் டீமில் உள்ள அனைவரும் ஜாக்கியின் முன் தோன்றி இன்பஅதிர்ச்சி கொடுத்தபோது, ஜாக்கி கண்ணீர் மல்க அனைவரையும் தழுவிக்கொண்டார். 40 வருடங்கள் தன் திரைவாழ்க்கையின் சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொண்டமைக்காக, அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க