வெளியிடப்பட்ட நேரம்: 02:50 (16/02/2017)

கடைசி தொடர்பு:02:49 (16/02/2017)

இது இந்திய நெட்டிசன்களின் காதலர் தினம்!

பெரும்பாலான இளைஞர்கள் காதலர் தினத்தில், தன் உற்ற இணையிடம் காதலைச் சொல்லி, பிடித்த பரிசுப்பொருட்களை வாங்கிக்கொடுத்து, மதியம் மாலில் சினிமா, இரவில் லைட் மியூசிக்குடன் டின்னர் எனக்கொண்டாடித் தீர்க்க; காதல் வயப்படாத அன்பர்கள், தங்களின் அன்பிற்கு உரிய பெற்றோர்களை வணங்கும் நாளாக, காதலர் தினத்தை மாற்றிக் கொண்டாடியிருக்கிறார்கள். சில நெட்டிசன்கள் அதற்கும் ஒரு படிமேல் போய் #LovedParentsWorshipDay எனும் ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பதிவிட்டு,தாய் மற்றும் தந்தை செலுத்தும் பாசம் குறித்து படங்கள் பதிவேற்றி ட்விட்ட கடந்த இரண்டு நாட்களாக, இந்தியா ட்ரெண்டில் இருக்கிறது, இந்த ஹேஷ்டேக். தாய் தந்தைப்பாசத்துல நெட்டிசன்கள்...நம்மளையே மிஞ்சிடுவாங்க போல!. வாவ்!
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க