வெளியிடப்பட்ட நேரம்: 17:21 (05/03/2017)

கடைசி தொடர்பு:09:02 (06/03/2017)

வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தை: அப்பாவானார் கரண் ஜோஹர்

இந்தி திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹருக்கு, வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. இரட்டைக் குழந்தைகளில் ஒன்று ஆண், மற்றொன்று பெண்.

கரண் ஜோஹர், இன்னும் இதனை உறுதிப்படுத்தாத நிலையில், பொதுச் சுகாதாரத்துறை இதனை உறுதிப்படுத்தியுள்ளது. கரண் ஜோஹரின் குழந்தைகள் குறித்த அறிக்கையில், குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் குறித்த தகவல் எதுவும் இல்லை.

அந்தேரியில் உள்ள மஸ்ரானி மருத்துவமனையில் பிறந்துள்ள குழந்தைகளுக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க