வெளியிடப்பட்ட நேரம்: 20:49 (06/03/2017)

கடைசி தொடர்பு:20:48 (06/03/2017)

மினிமம் பேலன்ஸ் அக்கப்போர்கள் - இன்னும் எதுக்கெல்லாம் சட்டம் கொண்டு வரலாம்?

க்ளீன் இந்தியா, டிஜிட்டல் இந்தியான்னு சொல்லிட்டு கலர் கலரா படம் ஓட்டி ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க. கட்சி. ஆனா ஆட்சிக்கு வந்ததுல இருந்து அவங்க கொண்டுவந்த திட்டம் எல்லாமே அய்யய்யோ, அம்மம்மா ரகம்தான். டீமானிடைஷேஷன்ல அதிர்ச்சி அடைய ஆரம்பிச்ச இந்தியன் இன்னும் அதிர்ச்சி வைப்ரேஷன்லதான் இருக்கான். இப்போ புதுசா ஆதார் கார்ட் இருந்தாதான் மதிய உணவு, 5,000 ரூபாய் பேலன்ஸ் இருந்தாதான் பேங்க் அக்கவுன்ட், மினிமம் டிரான்ஷாக்சனுக்கு 150 ரூபாய்னு விதவிதமா ரகரகமா திட்டம்லாம் அறிவிச்சுக்கிட்டு இருக்காங்க. குருநாதா இதுக்கு ஒரு முடிவே கிடையாதா குருநாதான்னு எல்லோரும் ஃபீல் பண்ற அளவுக்கு இன்னும் என்ன மாதிரி சட்டம் எல்லாம் வரும்னு இமாஜினேஷன் ஆஃப் யோசனை பண்ணிப் பார்த்தோம். இதோ பாருங்க மக்களே.

* பசங்க என்னதான் மாடல் மாடலா பைக் வெச்சுக்கிட்டு சுத்தினாலும் முக்கால்வாசிப் பேர் பெட்ரோல் போடவே காசு இல்லாம ரிசர்வ்ல வெச்சுதான் ஓட்டிக்கிட்டு இருப்பாங்க. இப்படி பசங்க காலங்காலமா ரிசர்வ்லேயே வெச்சு வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கிறதை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேணாம். அதுக்குதான் இனிமே பைக்ல எப்பவும் டேங்க் ஃபுல்லா இருந்தாதான் வண்டி எடுக்கணும்னு ஒரு சட்டம் கொண்டு வரணும். டேங்க் ஃபுல் பண்ணி எங்கேயாவது சுற்றி அது குறைஞ்சதுன்னு அதுக்கும் டிராஃபிக் போலீஸ் ஃபைன் போடலாம்னு ஒரு சட்டம் கொண்டு வரலாம். பசங்க பைக்கை வெளியே எடுக்கக் கூடாது. வரலாம் வா...

சட்டம்

* இந்த ஜியோ சிம் வந்த பிறகு எல்லோரும் ரீசார்ஜ் பண்ற பண்டையக்கால பண்பாட்டையே மறந்துட்டாங்க. ஒருகாலத்துல மிஸ்டு கால் கொடுத்தவங்களுக்கு எல்லாம் இப்போ கால் பண்ணா நம்ம காலை கட் பண்ணிட்டு திரும்ப கால் பண்ற அளவுக்கு ஜியோ சிம் எல்லோரையும் பணக்காரர்கள் ஆக்கி வெச்சிருக்கு. ஆகவே டூயல் சிம் வெச்சுருக்கிற மக்களே... இன்றுமுதல் உங்களோட இன்னொரு சிம்ல மினிமம் பேலன்ஸ் 300- ரூபாய்க்கு குறையாம வெச்சு இருக்கணும்னு சட்டம் கொண்டு வரணும். அந்த மாதிரி பேலன்ஸ் இல்லாதவங்க சிம் எல்லாத்தையும் டீ ஆக்டிவேட் பண்ணிடணும்னு சீக்கிரமா சட்டம் அறிவிக்கணும். மொபைலா.....மொபைலா.

* இந்த உலகசினிமா பைத்தியங்கள் ஆஃப் புத்திசாலிகள் சிலர் இருக்காங்க. தமிழைத் தவிர எந்த மொழியில் எந்தப் படம் வந்தாலும் அதைப் பார்த்துட்டு உடனே ரிவ்யூ எழுதிடுவாங்க. எல்லாரையும் கலாய்க்கிற இந்த மாதிரி உலக சினிமாக்காரர்களை கலாய்க்கவே உள்ளூர் சினிமா திட்டம்னே ஒரு திட்டம் கொண்டு வரணும். அதன்படி உலக சினிமாக்கார்கள் எல்லாம் `முத்துராமலிங்கம்` மாதிரி படங்களுக்கு முதல் ஷோ போகணும். போகாதவங்க அதுக்கு அப்பறம் சினிமா ரிவ்யூவே பண்ணக் கூடாதுன்னு திட்டம் போடணும்.

* 'டங்காமாரி' பாட்டு ஹிட் ஆனதுல இருந்து தமிழ் சினிமாவில் வந்த ட்ரெண்ட் இது. அப்போ இருந்து இப்போ வரைக்கும் புரியாத வார்த்தைகளை வெச்சுப் பாட்டு எழுதி ஹிட் பண்றதையே வேலையா வெச்சு இருக்காங்க. வாராவாரம் புதுப்புது வார்த்தைகளை வெச்சு வந்த பாட்டை எல்லாம் வெச்சே தமிழுக்கு தனி டிக்‌ஷனரி எழுதலாம் போல. அந்த மாதிரி ட்ரெண்டை முடிக்கணும்னா இனித் தமிழ் சினிமாவில் புரியற மாதிரி பாட்டு மட்டும்தான் எழுதணும்னு சட்டம் கொண்டு வரணும்.

சட்டம்

* தமிழ்நாட்டுல யாரைக் கேட்டாலும் மீம் கிரியேட்டர்னு சொல்ற பழக்கம் நம்மகிட்ட அதிகமாகிட்டே வருது. இன்ஜினீயரிங் படிச்சவங்கள்ல தொடங்கி டாக்டருக்குப் படிச்சவங்க வரைக்கும் எல்லோரும் மீம் கிரியேட்டர்னுதான் சொல்லிட்டுத் திரியறாங்க. ஆகவே மக்களே இனிமே மீம் கிரியேட்டர் பேர் எடுக்கணும்னா ஒவ்வொருத்தங்களும் மாசத்துக்கு 1000 மீம் கண்டிப்பா பண்ணி இருக்கணும். 1000 மீம் பண்ணாத மீம் கிரியேட்டர்களுக்கு அபராதம்னு சட்டம் கொண்டு வரலாம்.

* உலகத்துல உள்ள முக்கால்வாசிப் பொண்ணுங்களுக்கு முக்கியமான பழக்கம் ஒண்ணு இருக்கு. பசங்க ஹாய் அனுப்பினா கிட்டத்தட்ட ஆறு வருஷத்துக்கு அப்புறமா அதுக்கு `ஹ்ம்ம்`ன்னு ரிப்ளை அனுப்புவாங்க. இதுக்கு ஒரு முடிவே இல்லையான்னு நினைச்சுக்கிட்டு பசங்களுக்கு விடிவு பொறக்கணும்னா இனி கேர்ள்ஸ் மெசேஜ் பார்த்த ஒரு வருசத்துக்குள்ள அதுக்கு ரிப்ளை பண்ணணும்னு சட்டம் கொண்டு வரணும். அது மட்டும் இல்லாம அதுக்கு `ஹ்ம்ம்` `ஓகே`` ரிப்ளை அனுப்பக் கூடாதுன்னு சட்டம் கொண்டு வரணும்.

சட்டம்

* செல்ஃபி போடுறதையே பாரம்பரிய வழக்கமா வெச்சுக்கிட்டு இப்போல்லாம் நிறையப் பேர் சுத்திக்கிட்டு இருக்காங்க. அவங்களோட ஃப்ரென்ட் கேமராவை ஆஃப் பண்றத்துக்குன்னே அதிரடி சட்டம் ஒன்னு கொண்டு வரணும் மக்களே. அதன்படி ஒருநாளைக்கு ஒரு விலையில்லா செல்ஃபிதான் எடுக்கணும். அதுக்கு மேல எடுக்கிற ஒவ்வொரு செல்ஃபிக்கும் காசு வசூலிக்கப்படும்னு சட்டம் கொண்டு வரணும்.

* இப்போல்லாம் இந்தியாவில் பா.ஜ.க. கட்சிக்கு எதிரா பேசுற எல்லோரையும் தேசத் துரோகின்னு சொல்ற வழக்கம் உருவாகி இருக்கு. ஒவ்வொரு முறையும் கஷ்டப்பட்டு அந்த மாதிரி பேசுறதுக்கு பதிலா இனி பா.ஜ.க. கட்சியில் இல்லாத எல்லோருக்கும் பாகிஸ்தான் ஃப்ளைட் டிக்கெட் கொடுக்கப்படும்னு சட்டம் கொண்டு வரலாம். மேலும் பாகிஸ்தானில் குடியேற விசா வழங்கப்படும்னு சொல்லலாம். 

- லோ.சியாம் சுந்தர்.

 

 


டிரெண்டிங் @ விகடன்