வாட்ஸ் அப்பில் இனி பழையபடி ஸ்டேட்டஸ் தட்டலாம்!

ஸ்நாப் சாட்டை காப்பியடித்து, வாட்ஸ் அப் தனது ஸ்டேட்டஸ் முறையை மாற்றியமைத்தது. ஆனால், ஸ்டேட்டஸ் முறையை மாற்றியமைக்கும், வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்டை, அதன் 900 மில்லியன் யூசர்ஸ்களில் பெரும்பாலானோர் அன்லைக் செய்தனர்.

WhatsApp

குறிப்பாக, பழையபடி டெக்ஸ்ட் மெஸேஜ் ஸ்டேட்டஸ் முறையை கொண்டு வருமாறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. இதையடுத்து வாட்ஸ் ஆப் மீண்டும் பழைய நடைமுறைக்கு வருவதற்கான சோதனையில் இறங்கியுள்ளது. அதன்படி 2.17.95 என்ற Beta வெர்ஷனை, இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இதை இன்ஸ்டால் செய்வதன் மூலம் 24 மணி நேரத்தில் உங்களது வாட்ஸ் அப்பில் பழையபடி ஸ்டேட்டஸ் தட்டலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!