வெளியிடப்பட்ட நேரம்: 11:36 (14/03/2017)

கடைசி தொடர்பு:12:24 (14/03/2017)

பாலியல் குற்றச்சாட்டை மறுக்கும் TVF அருணாப் குமார்!

டிவிஎப் என்ற ஆன்லைன் சேனல் தலைமைச் செயல் அதிகாரி அருணாப் குமார் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ள்ளார். டிவிஎப் என்ற ஆன்லைன் சேனலின் தலைமைச் செயல் அதிகாரியாக அருணாப் குமார் என்பவர் இருந்து வருகிறார். TVF ல் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், அருணாப் குமார் ஒரு மாத காலமாக பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் தன்னைப் பற்றி எந்த விவரங்களையும் குறிப்பிடவில்லை. பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 2014 ம் ஆண்டு TVF ல் வேலைக்கு சேர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து அருணாப் குமார் மீது தொடர்ச்சியான பாலியல் புகார்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டன.

திரைப்படத் தயாரிப்பாளர் ரீமா சென்குப்தா என்பவரும் அருணாப் குமார் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், அருணாப் குமார் இந்த குற்றச் சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ளார். 'இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானது. இதனை காவல்நிலையத்தின் மூலம் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நான் நேரிடையாக பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்' என்றும் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க