Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நீங்கள் விரும்பிய நிம்மதி உங்களுக்கு கிடைத்திருக்கிறது' - கணவர் பற்றி நடிகை ஜெயசுதா உருக்கம்

கணவருடன் நடிகை ஜெயசுதா


டிகை  ஜெயசுதாவின் கணவரும், சினிமா தயாரிப்பாளருமான நிதின் கபூர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். இவரின் மறைவு, அவரது மனைவி ஜெயசுதா மற்றும் சினிமா பிரபலங்களுக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகை ஜெயசுதா இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில், தன் கணவரைப் பற்றியும், அவரது மரணத்தைப் பற்றியும் உருக்கமாக ஒரு பதிவை எழுதியுள்ளார். 

" என்னுடைய அன்புக்குரிய கணவர், நம்பிக்கைக்குரியவர் மற்றும் உற்ற துணையுமான நிதின் கபூர், தற்போது தேவதூதர்களிடம் இறுதியாகச் சென்றடைந்து அமைதியாகியுள்ளார். அவர் நீண்ட காலமாக தேடிக்கொண்டிருந்த இந்த அமைதி, இறுதியாக அவருக்கு கிடைத்திருக்கிறது.

மன அழுத்தம் உண்மையானது;  அதீத சக்தியுடைய மனநிலையாகும்.  என் வாழ்வில் நடந்த இந்த இருண்ட காலத்தை, மிகவும் கண்ணியமாகக் கையாண்ட ஊடகத்தினருக்குப் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இப்போது, இந்த துயரமான காலத்தில், என் குடும்பத்துடன் இருப்பதே எனக்கு மிக முக்கியமான விஷயம்!

32 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த நாளில்தான் அவர் என்னை திருமணம் செய்துகொண்டார். இன்றைக்கு எங்களுடைய திருமண நாள். இந்த நாளில், நாம் கணவர் நிதின் கபூருடன் நடிகை ஜெயசுதாஇருவரும் ஒன்றாகக் கழித்த அந்த அழகான காலங்களையும், நம் பழைய நினைவுகளையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். அவர் எங்கு இருந்தாலும், அவரின் அன்பால் எங்களைப் பார்த்துக்கொண்டும், பாதுகாத்துக்கொண்டும் இருப்பார் என்று எனக்கு தெரியும். 

கடவுளின் கருணையாலும் ஆசீர்வாதத்தாலும் உங்களுக்கு நித்திய அமைதியும், சந்தோஷமும் கிடைக்கட்டும். 

நம் குடும்பத்துக்கு, நீங்கள் அளித்த அன்புக்கும் ஆசிர்வாதத்துக்கும் நன்றி. இந்த துயரமான தருணத்தில்,  என் குடும்பத்தாருக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்”.

இவ்வாறு பதிவிட்டுள்ள நடிகை ஜெயசுதாவுக்கும் நிதின் கபூருக்கும் 1985-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இத்தம்பதியருக்கு நிகார், ஸ்ரேயான் என்ற இரு மகன்கள் உள்ளனர். ஜெயசுதா தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பெரும் புகழைப் பெற்றவர். எழுபதுகளின் தொடக்கத்தில் வெளியான அரங்கேற்றம் திரைப்படத்தில் ஜெயசுதாவை, தமிழுக்கு அறிமுகம் செய்தார் இயக்குநர் பாலச்சந்தர். பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'பாண்டியன்' திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரியாகவும், தவசி திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்தின் மனைவியாகவும் நடித்தவர். தமிழை விடவும், தெலுங்கு திரையுலகில் புகழ்கொடியை உயரப் பறக்கவிட்டவர், அரசியலிலும் ஈடுபட்டு எம்.எல்.ஏ-வாகவும் இருந்துள்ளார். தற்போது தெலுங்கு திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூரும், இதுவரை பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். ஆனால், அவர் தயாரித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் சமீப காலமாகவே மிகுந்த மன வேதனையிலும், மன அழுத்தத்திலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில்கூட அவரது மகனை வைத்து ஒரு திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். நிதின் கபூர், பிரபல இந்தி நடிகர் ஜிதேந்திராவின் சகோதரர் ஆவார்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர், அவர் மும்பையில் தங்கியிருந்த தனது சகோதரியின் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். மூன்று நாள் துக்கத்துக்குப் பிறகு, ஜெயசுதா இன்று சமூக வலைதளம் வாயிலாக தனது கணவர் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்நிலையில் நடிகை ஜெயசுதாவை நேரடியாக சந்தித்தும், போன் வாயிலாகவும் பல பிரபலங்கள் ஆறுதல் கூறிவருகிறார்கள். 

- கு.ஆனந்தராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close