Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பள்ளிக்கு ஒரு வருஷம் பிரேக்.. நாவல், ஷேர்மார்க்கெட்டில் டாப்! - சுமார் ஸ்டூடன்ட் டூ சூப்பர் கேர்ள் சாகரிக்கா

சாகரிக்கா

“2015-ம் வருஷம் என்னோட பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்துச்சு. என்னோடு படிச்சவங்க எல்லாம் ரிசல்ட் வந்த பரபரப்போடு பயோ மேக்ஸ், ப்யூர் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ்னு ஓடி ஓடி அப்ளை பண்ணிட்டு இருந்தாங்க. நான் எந்தப் பதற்றமும் இல்லாமல், ஸ்கூலுக்கு ஒரு வருஷம் பிரேக் எடுத்துக்க முடிவுப் பண்ணினேன். ஃப்ரண்ட்ஸ், ஃப்ரண்ஸோட பேரன்ட், சொந்தக்காரங்கனு பலரும் ஏகப்பட்ட அட்வைஸ் பண்ணி பயமுறுத்தினாங்க. நான் வாழ்க்கையில் பெரிய தப்பைப் பண்ணிட்ட மாதிரி நினைச்சவங்க எல்லாம், இப்போ பாராட்டறாங்க'' எனப் பெருமையுடன் பேசத் தொடங்குகிறார் ‘மை அன்ஸ்கூல்டு இயர்’ புத்தகத்தின் ஆசிரியர் சாகரிக்கா. 

‘என்னோட அம்மாவும் அப்பாவும் ‘திருச்சி பிளஸ்' என்ற கல்வி நிலையம் மூலம் போட்டித் தேர்வுகளுக்கானப் பயிற்சியை கொடுக்கிறாங்க. மாநிலக் கல்வி முறை, குழந்தைகளின் வளர்ச்சிக்குச் சரியானதில்லை என்ற கருத்து அவங்களிடம் இருக்கு. நான் சுமாரா படிக்கிற மாணவி. படிப்பைவிட டான்ஸ், பாட்டு, நாடகம், விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். இந்தச் சூழலில், 'நீ பிரேக் எடுத்துக்கோ. ஸ்கூலுக்குப் போகாதே'னு சொன்னா கசக்குமா? குஷியோடு சரி சொல்லிட்டேன். ஸ்கூலுக்குப் போய் கத்துக்கிறதைவிட உலகத்துல கத்துக்க நிறைய விஷயம் இருக்குனு, அப்பா எனக்கு ஒரு டைம்டேபிள் போட்டுத் தந்தார்.

காலையில் ஆறு மணிக்கு எழுந்துக்கணும். ரெண்டு மணி நேரம் ஜிம்மில் பாடி பிட்னஸ் பயிற்சி. அப்பறம் கொஞ்சம் படிப்பு. அதாவது, வேதியியல், இயற்பியல், பொருளாதாரம் என அனைத்துப் பாடங்களும் வாழ்க்கையில் எப்படி உதவுது, அதன் பயன்பாடுகள் பற்றி யூடியூப் வழியே அப்பா சொல்லித் தருவார். அதனால், ஒவ்வொரு பாடத்தையும் எளிமையாக கத்துக்க முடிஞ்சது. சாயந்திரம், கம்ப்யூட்டர் கிளாஸ். வீடு, வீடாகச் சென்று அழகுச் சாதனப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பேன். விற்பனை செய்யும்போது மக்களிடம் எப்படிப் பேசணும், அதில் கிடைச்ச லாபம் பற்றி சொல்லித் தருவார். விடுமுறை நாட்களில் குறைஞ்சது இரண்டாயிரம் ரூபாய் வரைக்கும் சம்பாதிச்சேன். இப்போ, எந்தப் பொருளையும் என்னால் அழகா மார்க்கெட்டிங் பண்ண முடியும்’ எனக் கண்களை அகல விரித்துப் புன்னகைக்கிறார் சகாரிக்கா. 

சாகரிக்கா

அந்த ஒரு வருஷத்தில் வேறு வேற என்னெல்லாம் கற்றுக்கொண்டார் சாகரிக்கா. 

“ஆவணப்படம் எப்படி எடுக்கிறாங்கனு தெரிஞ்சுக்கிட்டேன். சில ஆவணப்படங்களையும் எடுத்திருக்கேன். பங்குச் சந்தையில் லாபகரமா முதலீடு செய்றது எப்படி எனத் தெரிஞ்சுக்கிட்டேன். அன்றாட நாளிதழ்களை வாசிச்சு, சமூகப் பிரச்னைகளைத் தெரிஞ்சுக்கிட்டேன். தினமும் இரவில் அம்மா, அப்பாவோடு அன்றைய விஷயங்களைப் பற்றி விவாதம் செய்வோம். இதன் மூலம் சமூகத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றி நிறையப் புரிதல் கிடைச்சது. அரசியல் கூட்டங்களுக்கும் போய் பார்ப்பேன். ஒவ்வொரு நாளும் ஏற்பட்ட அனுபவங்களை என்னுடைய பிளாகில் பதிவு செஞ்சேன். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது.

வேறு மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் போய் வாழ்வியல் அனுபவங்களைக் கற்று வந்தேன். ஹோட்டல், தொழிற்சாலை எனப் பல நிறுவனங்களுக்கு நேரில் போய், ஏ டூ இசட் விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். ஹோட்டலுக்குப் போய் டேபிள் துடைக்கிறதில் ஆரம்பிச்சு சாப்பாடு பரிமாறுவது வரை தெரிஞ்சுக்கிட்டேன். ஒவ்வொரு இடத்துக்கும் போகிறதுக்கு முன்னாடி, அதைப் பற்றி ஓரளவு அப்டேட் செஞ்சுப்பேன். 'சாகரிக்கா சிவக்குமார் வேடு பிரஸ்' டாட் காமில் ஜூலை 2015 முதல் டிசம்பர் 2016 வரை நான் கற்றுக்கொண்ட அனுபவங்களைப் பகிர்ந்து இருக்கேன். அதைப் படிச்சு பலரும் தங்கள் கமெண்ட்ஸ்ஸைப் பதிவுப் பண்ணி இருக்காங்க. என்னுடைய பதிவுகளைப் புத்தக வடிவில் வெளிட்டேன். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. என்னுடைய தோழிகள் என்னைப் பெருமையோடு பார்க்கறாங்க. இப்போது தனியாக என்னால் எல்லா இடங்களுக்கும் தனியாக போய்ட்டு வர முடியும். முன்னாடி இங்கிலீஷ் மீடியம் படித்திருந்தாலும், இங்கிலீஷில் படிக்கவும் எழுதவும் சிரமப்பட்டேன். அந்த ஒரு வருஷ பிரேக்கில் இங்கிலீஷை சரளமாக பயன்படுத்த கத்துக்கிட்டேன்'' என்கிறார் சாகரிக்கா. 

பத்தரிகையாளர்கள், தொழில் முனைவோர், எழுத்தாளர்கள் எனப் பலரையும் நேரடியாகச் சந்தித்து பேசி இருக்கிறார் சாகரிக்கா. ''அந்த அனுபவம் என்னை பல்வேறு வகைகளில் வழி நடத்தியது. இந்த ஆண்டு நான் பள்ளியில் படிக்க ஆரம்பிச்சுட்டாலும், இடையிடையே கருத்தரங்குகள், சொற்பொழிவுகளில் கலந்துக்க பள்ளியில் அனுமதி வாங்கி இருக்கேன். திருச்சியில் ‘யூத் எக்கோ கிளப்’ ஆரம்பிச்சு, ஏராளமான பள்ளி மாணவர்களை உறுப்பினர்களாக சேர்த்திருக்கேன். இதன் மூலம், இயற்கை முறை விவசாயம் செய்ய இருக்கிறோம். ஐஐடி தேர்வு எழுதுவதற்கான பயிற்சியும் பெற்றுவருகிறேன். ஸ்கூலுக்கு நான் எடுத்த ஒரு வருஷ பிரேக், எனக்குப் பல வாய்ப்புகளை உருவாக்கி, உலகத்தைப் புரியவெச்சிருக்கு. வகுப்புக்கு வெளியேதான் கற்க நிறைய இருக்கு'' என்கிறார் இந்த க்யூட் சாகரிக்கா. 

- ஆர்.ஜெயலெட்சுமி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close