வெளியிடப்பட்ட நேரம்: 20:17 (06/04/2017)

கடைசி தொடர்பு:20:17 (06/04/2017)

இந்தியாவில் கூகுள் ப்ளே மியூசிக் சந்தா 89 ரூபாய்

இந்தியவில் கூகுள் ப்ளே மியூசிக் (Google Play Music) ஆப் All-Access சந்தா கட்டணமாக மாதக் கட்டணமாக 89 ரூபாய் கூகுள் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. பாடல்கள் கேட்பதற்கும் இணையத்தில் இருந்து எளிதாக பாடல்களை தரவிறக்கம் செய்வதற்கும் கூகுள் ப்ளே மியூசிக் என்ற ஆப்பை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

google play music

அந்த ஆப் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. கூகுள் ப்ளே மியூசிக் ஆப்பை ஆண்ராய்டு ஓஎஸ் மற்றும் ஐ ஓஎஸ் ஆகிய தளங்களில் பயன்படுத்த முடியும். தற்போது அந்த ஆப் மூலம் பாடல்களை ஸ்ட்ரீம் செய்யவும், டவுன்லோடு செய்யவும் கூகுள் நிறுவனம் கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. அதன்படி மாதம் 89 ரூபாய் கட்டி கூகுள் ப்ளே மியூசிக் ஆப்பை பயன்படுத்தலாம். 45 நாட்களுக்குள் கூகுள் ப்ளே மியூசிக்கில் இணைந்தால் மாதக் கட்டணம் 89 ரூபாயில் இருந்து தள்ளுபடி வழங்கப்படும் என்றும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.