வெளியிடப்பட்ட நேரம்: 19:49 (07/04/2017)

கடைசி தொடர்பு:19:49 (07/04/2017)

தன்னைப் பற்றி ஜெயலலிதா சொன்னவை... தற்போது அவருக்கு நடப்பவை..!

மிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, அரிதாக வழங்கிய சில நேர்காணல்களில் தன்னைப் பற்றிப் பகிர்ந்திருந்த வார்த்தைகளோடு, இன்றைய அரசியல் சூழல் காட்சிகளைப் பொருத்திய இந்தப் புகைப்படத் தொகுப்பு... வருத்தம், அதிர்ச்சி, ஆதங்கம், ரௌத்திரம் கடத்தக்கூடியது. ஓர் ஆளுமையின் இறப்புக்குப் பின்னான இந்தக் காட்சிகள், வாழ்வின் நிலையாமையை  உணர்த்துபவையும்கூட!

ஜெயலலிதா

1. ''ஒருவர் சந்தோஷத்தை அடையும் ஒரே வழியாக நான் நம்புவது, மோட்சத்தை அடைவதால் மட்டுமே. அதாவது, பிறப்பில் இருந்து விடுதலை பெறுவது!"

- ஜெ. ஜெயலலிதா (1999, சிமி கேர்வலின் 'ரான்டவு (rendezvous)' தொலைக்காட்சி நிகழ்ச்சி)

ஜெயலலிதா

உங்கள் பிணத்துக்கும் விடுதலை இல்லையா?

 

2. ''என் இயல்பில் இருந்து நான் மாறியிருக்கும் விதம் எனக்கே ஆச்சர்யமானது. இருந்தும், என் அடிப்படை உள்ளுணர்வு என்பது... ஒருவரை நம்புவது. அந்த என் குணத்துடன்தான் நான் போரிட வேண்டும்.''


- ஜெ.ஜெயலலிதா (1999, சிமி கேர்வலின் 'ரான்டவு (rendezvous)' தொலைக்காட்சி நிகழ்ச்சி)

 

ஜெயலலிதா
 நம்பிக்கை வென்றதா, பொய்த்ததா?

 

3. ''வாய்ப்பு கிடைத்தால் மற்றவர்களின் கண்களில் இருந்து மறைந்துவிடவே விரும்புகிறேன்."

(1999, சிமி கேர்வலின் 'ரான்டவு (rendezvous)' தொலைக்காட்சி நிகழ்ச்சி)

இன்டர்வியூவில்....

'அணுகுவதற்கு மிகவும் கடினமானவரா நீங்கள்?’

''இல்லை. வாழ்க்கை என்னை அப்படி மாற்றிவிட்டது. இப்போது கூட எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால், மற்றவர்களின் கண்களில் இருந்து மறைந்துவிடவே விரும்புகிறேன். ஹைதராபாத்தில் உள்ள என்னுடைய பண்ணைத் தோட்டத்துக்குச் சென்று அங்கு ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். யாரையும் பார்க்காத, யாருடைய கேள்விகளுக்கும் பதில் அளிக்காத, எந்த கவனச் சிதறலும் இல்லாத ஒருத்தியாக வாழ விரும்புகிறேன். என்னுடைய புத்தகங்கள், இசை, என்னுடைய நாய் என எனக்காக தனிமையுடன் வாழ விரும்புகிறேன்''.

''உங்களின் நம்பிகையைப் பெற என்ன செய்ய வேண்டும்?''

''நேர்மையாக இருந்தாலே போதும். ஆனால் என்னிடம் வருகிறவர்கள் எல்லோருமே எதாவது ஒரு தேவையுடன்தான் வருகிறார்கள்''.

''வாழ்க்கை தேவையின் அடிப்படையிலானதுதானே?''

''இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை போன்ற தேவைகளை யாரும் மறுக்க முடியாத அடிப்படைத் தேவைகள். ஆனால் பேராசை காரணமாக ஏற்படும் தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடியாது''.

 

ஜெயலலிதா

மறைந்த பின்னும் உங்களை விடவில்லையே...

 

4. ''நான் அறிவேன்... என்னிடம் வருகிறவர்கள் எல்லோருமே ஏதாவது ஒரு தேவையுடன்தான் வருகிறார்கள்." (1999, சிமி கேர்வலின் 'ரான்டவு (rendezvous)' தொலைக்காட்சி நிகழ்ச்சி)

ஜெயலலிதா

ஆம்... டிசம்பரில் மறைந்தீர்கள்; ஜனவரியில் உங்கள் படம் தேவையற்றதாகிவிட்டது

 

5. ''எம்.ஜி.ஆரின் இறுதிச் சடங்கு. ஏழு, எட்டு பெண்கள், நான் பெயர் குறிப்பிட விரும்பவில்லை... இரண்டாம் நாள் காலை என்னருகில் வந்து நின்று, என் பாதங்களில் மிதித்தார்கள். அவர்களின் நகம் பதியுமளவுக்கு என்னைக் கீறினார்கள், கிள்ளினார்கள். என் உடல் முழுக்கக் காயங்கள் தந்தார்கள். என் முகம் மட்டும் விட்டுவைக்கப்பட்டது... காரணம் அது மற்றவர்கள் பார்க்கக்கூடியது என்பதால்."

(பிரபு சாவ்லாவுக்கு அளித்த நேர்காணல், இந்தியா டுடே)

ஜெயலலிதா

இம்முறை முகமும் தப்பவில்லையோ?! இப்போது நடப்பதெல்லாம் உங்கள் ஆன்மாவுக்கும் கூட தெரிய வேண்டாம். 

 

- ஜெ. ஜனனி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்