வானத்தில் பிறந்த தேவதை... 42,000 அடி உயரத்தில் நிகழ்ந்த ஆச்சர்யம்! | Baby Born 42,000-Feet-High Up In the Turkey flight

வெளியிடப்பட்ட நேரம்: 08:17 (10/04/2017)

கடைசி தொடர்பு:11:54 (10/04/2017)

வானத்தில் பிறந்த தேவதை... 42,000 அடி உயரத்தில் நிகழ்ந்த ஆச்சர்யம்!

நஃபி டியாபி என்ற பெண், 42,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில், அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சம்பவம், உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Turkey Airlines


துருக்கி விமானத்தில், இஸ்தான்புல் சென்றுகொண்டிருந்தார் ஏழு மாத கர்ப்பிணி டியாபி. அவருக்கு, திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. விமானப் பணிப் பெண்கள், உடனடியாக அவருக்கு பிரசவம் பார்த்தனர். நீண்ட நேரம் வலியால் அவதிப்பட்ட டியாபி, அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். விமானத்தில் பறந்துகொண்டே உலகுக்கு வந்த அந்தக் குட்டிப் பெண்ணின் புகைப்படங்களை ’Welcome on board Princess!’ என்று துருக்கி ஏர்லைன்ஸ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. வானத்தில் பிறந்த பெண் குழந்தையை விமானப் பணிப்பெண்கள் பாசத்துடன் கொஞ்சும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close