‘கறுப்பு’ கடவுளின் நிறம்... தருண் விஜய்க்கான பதில்! #Video

தருண் விஜய்

த்தரப்பிரதே மாநில நொய்டாவில் தென் ஆப்பிரிக்க மாணவர்களை அங்குள்ளவர்கள் கடுமையாகத் தாக்கினர். இதுகுறித்து, உத்தரகாண்ட் மாநில பி.ஜே.பி தலைவரும், இந்திய - ஆப்பிரிக்க நட்புறவு குழுத் தலைவருமான தருண் விஜய்யிடம், கடந்த சில நாள்களுக்கு முன் பிரபல தொலைக்காட்சி ஒன்று, ''நிறத்தின் காரணமாகத்தான் தென் ஆப்பிரிக்க மாணவர்கள் தாக்கப்பட்டனரா'' என்று கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த தருண் விஜய், ''நாங்கள் இன்வெறியர்களாக இருந்தால், தென் இந்தியர்களை எப்படி ஏற்றுக்கொண்டோம்'' என்று பதிலளித்தார். இதேபோல், பி.ஜே.பி தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது தமிழர்களைத் 'தமிழ்ப் பொறுக்கிகள்' என்று குறிப்பிட்டார். ஒரு நாட்டில் இருக்கும் தலைவர்கள், ஒரு பகுதி மக்களை நிறம்வைத்து அவர்களை இழிவுப்படுத்துவது சரியா.... ஒரு மனிதனின் நிறம் இதுதான் என்று முடிவு செய்பவர்கள் யார்? இவர்கள் இதுபோல் தமிழ் மக்களை இழிவுப்படுத்துவது, அந்த மக்களிடையே மேலும் ஒற்றுமையைத்தான் அதிகரிக்கிறது. பி.ஜே.பி தலைவர்களின் பேச்சு ஒருபோதும் தமிழர்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடாது. மேலும், தமிழர்களின் அழகைப் பற்றி தெரிந்துகொள்ள கீழே இணைக்கப்பட்டிருக்கும் வீடியோவைப் பார்க்கவும்....

Do you like the story?

Please Appreciate the Author by clapping!