“சட்டை இல்லாத உடலில் ஆதார் அட்டையைத் தொங்கவிடு... உடலையாவது மண்ணைத் தின்னவிடு” #Video

விவசாயிகள்

ந்திய தலைநகரான டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் போராடி வருகிறார்கள். முதல் நாளில் இருந்தே அவர்கள் அரை நிர்வாணத்துடன்தான் போராடுகிறார்கள். நாளுக்குநாள் அவர்களின் போராட்டம் வலுபெற்றுக்கொண்டே வருகிறது. எலிகளைத் தின்றபடியும், பிச்சைப் பாத்திரத்தை ஏந்தியபடியும், மொட்டை அடித்தபடியும் என தினந்தோறும் பல்வேறு விதங்களில் போராடிக்கொண்டிருந்த விவசாயிகள், ஏப்ரல் 10-ம் தேதி முழு நிர்வாணமாகப் பிரதமர் அலுவலகம் முன்பு போராடத் தொடங்கினார்கள். வெளிநாட்டுக்குப் பயணம் செய்ய முடிந்த மோடிக்கு, போராடும் மக்களை வந்து பார்க்க நேரமில்லைபோலும். இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்று சொல்லிக்கொண்டிருந்த நமக்கு, இப்போது விவசாயிகள் நிலைமையைக் கண்டுகொள்ளாத அரசாகத்தான் இருக்கிறது. ஒருபக்கம், மெள்ளமெள்ள இந்தியாவில் விவசாயம் அழிந்துகொண்டிருக்க, மற்றொரு பக்கம் டிஜிட்டல் இந்தியாவை நோக்கி நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். எல்லாமே டிஜிட்டல் ஆனாலும், உணவு டிஜிட்டலில் கிடைக்காது என்பதை நாம் புரிந்து விவசாயிகளுக்கு உதவ வேண்டிய தருணம் இது. மேலும், விவசாயிகளின் போரட்டத்தைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்...

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!