'ஸ்னாப்சாட்டிற்கு' பதிலாக 'ஸ்னாப்டீலை' குதறிய நெட்டீசன்கள்... | Few Indians target 'Snapdeal' instead of 'Snapchat'

வெளியிடப்பட்ட நேரம்: 16:46 (16/04/2017)

கடைசி தொடர்பு:17:38 (16/04/2017)

'ஸ்னாப்சாட்டிற்கு' பதிலாக 'ஸ்னாப்டீலை' குதறிய நெட்டீசன்கள்...

'ஸ்னாப்சாட்' ஆப்பிற்கு பதிலாக 'ஸ்னாப்டீல்' ஆப்பிற்கு எதிராக நெட்டீசன்கள் தங்களது நாட்டுப் பற்றை ரேட்டீங் பதிவிடுவதன் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். அதனால் 'ஸ்னாப்டீல்' நூடுல்ஸ் ஆன நிலையில் உள்ளது. 


ஸ்னாப்சாட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர், 'அந்நிறுவனத்தின் சி.இ.ஓ இவான் ஸ்பீகலுக்கு ஸ்னாப்சாட்டை இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு விரிவுபடுத்தும் விருப்பம் இல்லை. ஸ்னாப்சாட் பணக்கார நாடுகளுக்கானது என்று ஸ்பீகல் கூறினார்' என்று  தெரிவித்தார். இதனால் கடுப்பான இந்திய நெட்டீசன்கள் ஸ்னாப்சாட்டை வறுத்தெடுக்க தொடங்கினர். ட்விட்டரில் boycottsnapchat என்ற ஹேஸ்டேக் உருவாக்கியும், ஆப் டவுன்லோடு பகுதியில் ஸ்னாப்சாட்டிற்கு ஒரு ஸ்டார் மதிப்பீடுகளையும் கொடுத்து தங்களுடைய எதிர்ப்பையும் நாட்டுப் பற்றையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் ஸ்னாப்சாட் நிறுவனம் அந்தக் கருத்தை மறுத்துள்ளது. நடந்த விஷயம் இப்படி இருக்கும் போது இது எதுவும் தெரியாத நாட்டுப் பற்று மிகுந்த நெட்டீசன்கள் 'ஸ்னாப்சாட்டிற்கு' பதிலாக 'ஸ்னாப்டீலை' கொதறி வருகின்றனர். 'ஸ்னாப்டீலுக்கு' ஒரு ஸ்டார் ரேட்டிங் வழங்கியும் ஏழை இந்தியாவை விட்டு ஸ்னாப்டீல் வெளியேற வேண்டும் என்றும் கமென்ட் பதிவிட்டு வருகின்றனர்.