வெளியிடப்பட்ட நேரம்: 20:51 (17/04/2017)

கடைசி தொடர்பு:21:01 (17/04/2017)

மாதச் சம்பளம் வாங்கியவரை கோடீஸ்வரனாக்கிய ஃப்ளிப்கார்ட்!

மாதச் சம்பளம் வாங்கி வந்த ஒருவரை இன்று கோடீஸ்வரனாக்கியுள்ளது ஃப்ளிப்கார்ட். ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முதல் ஊழியர்தான் இன்று மில்லியனராக உருவாகியுள்ளார்.

flipkart

பத்து வருடங்களுக்கு முன்னர் ஃப்ளிப்கார்ட் ஒரு சிறு நிறுவனமாகத் தொடங்கப்பட்டபோது அந்நிறுவனத்தின் முதல் ஊழியராகச் சேர்ந்தவர் வேலூரைச் சேர்ந்த ஐயப்பா. பட்டப்படிப்பு முடித்துள்ள ஐயப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் கொரியர் பாய் வேலை செய்துவந்தார். பின்னர் ஃப்ளிப்கார்ட் ஆரம்பித்தபோது அதன் முதல் ஊழியராகச் சேர்ந்தார். 

இன்றளவும் ஐயப்பா வேலைக்குச் சேர்ந்த நாளினை நினைவு கூறுகின்றனர் ஃப்ளிப்கார்ட்டின் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால். முதல் மாதச் சம்பளமாக ரூ. 8,000-க்கும் குறைவாகவே வாங்கி வந்த ஐயப்பா இன்று மாதம் ஆறு லட்சம் பெறுகிறார்.

எளிமை நிறைந்த ஐயப்பா பத்து வருடங்களுக்கு முன்னர் எந்த வீட்டில் இருந்தாரோ அதே வீட்டில் இன்றளவும் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். எப்பொழுதும் கற்றுக்கொண்டே இருப்பதுதான் இன்று உலகின் முன்னணி நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டில் ஒரு பங்குதாரராக உயரும் அளவுக்கு ஐயப்பாவை வளர்த்துள்ளது.