லா லா லேண்ட்க்கு ரகுமான் இசையமைத்திருந்தால் இப்படி தான் இருந்திருக்குமோ.!

கடந்தாண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற லா லா லேண்ட் திரைப்படத்தின் காட்சிக்கு வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் ரீமிக்ஸ் செய்யபட்ட வீடியோ தான் இப்போது ஆன்லைன் வைரல்.

la la land

எம்மா ஸ்டோன், ரியான் கோசஷ்லிங் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் லா லா லேண்ட். ஆஸ்கர் விருதுகளையும் இத்திரைப்படம் தட்டி சென்றது. இப்படத்தில் பிரபலமாக பேசப்பட்ட 'சிட்டி ஆஃப் ஸ்டார்ஸ்' பாடல் பலருக்கும் ஃபேவரட். இப்பாடலின் தமிழ் வடிவம் தான் இப்போது சமூக வலைதளங்களில் ஹிட்டடித்து வருகிறது.

பிரபுதேவா, கஜோல் நடிப்பில் உருவான மின்சார கனவு படத்தின் வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் இந்திய அளவில் புகழ்ப்பெற்றது. இப்பாடலுக்கு தான் லா லா லேண்ட் ஜோடி ஆடுகிறது. ஃபேஸ்புக்கில் இப்படல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளது. பாடலின் இசைக்கேற்ப காதலர்களின் நடனம் நூறு சதவீதம் பொருந்தும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!