Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓ.பி.எஸ்... ஈ.பி.எஸ்ஸை கடந்து தினகரனுக்கு இருக்கும் 7 சிக்கல்கள்! #Video

தினகரன்

மிழ்நாடு முதல் டெல்லி வரை கடந்த 3 மாதங்களாக அடிபடும் பெயர் டி.டி.வி தினகரன். யார் இந்த தினகரன் என்று கேட்கிறீர்களா? 

ஜெயலலிதாவின் தோழியும், தற்போதைய அ.தி.மு.க பொதுச்செயலாளருமான வி.கே. சசிகலாவின் சகோதரி வனிதாவின் மகன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா குடும்பத்தினர் அனைவரும் போயஸ் தோட்டத்துக்குள் நுழைந்து விட்டனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து, பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்படும் முன், அவருக்குப் பதிலாக அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக தினகரன் நியமனம் செய்யப்பட்டார். அத்தோடு நின்றிருந்தால்கூட அவர் இந்த அளவுக்கு பேசப்பட்டிருக்க மாட்டார். சென்னை ஆர்.கே நகர்த் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க அம்மா அணி வேட்பாளராகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். ஆனால், வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இத்தொகுதியில் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது. தினகரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இரு அணிகளாகச் செயல்படும் அ.தி.மு.க நிர்வாகிகள் ஒன்றாக இணைந்து செயல்படுவது என இரு அணிகளும் முடிவு செய்ததும், தினகரன் கட்சியில் இருந்து விலகி விட்டதாக அறிவித்தார். மேலும், அ.தி.மு.கவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைத்து, தற்போது கட்சியை விட்டு ஒதுங்கிவிட்ட தினகரன், அவருக்கு எதிரான வழக்குகளில் இருந்து ஒதுங்கிவிட முடியாத சூழ்நிலை உள்ளது. அந்நியச் செலாவணி மோசடி தொடங்கி, இரட்டை இலைச் சின்னத்தை தனது அணிக்குப் பெறுவதற்காக டெல்லியைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரிடம் 60 கோடி ரூபாய் பேரம் பேசியது வரை பல்வேறு வழக்குகளில் தினகரன் சிக்கியுள்ளார். தினகரனுக்கு எதிராக பல வருடங்களாக நிலுவையில் உள்ள வழக்குகளும், இப்போது விசாரணைக்கு வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும் அவர் செய்த ஊழல்கள் மற்றும் சிக்கியுள்ள வழக்குகள் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள, கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்...

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close