வெளியிடப்பட்ட நேரம்: 21:02 (27/04/2017)

கடைசி தொடர்பு:21:01 (27/04/2017)

‘‘தமிழ்நாடு நிலைமைக்கு நானே அரசியலுக்கு வரலாம் போல!’’ நடிகை ரஞ்சனி

அரசியலுக்கு

சோஷியல் மீடியாக்களில் தன் அனல் தெறிக்கும் கருத்துக்களை அடிக்கடி வெளியிட்டுக் கொண்டிருப்பார் நடிகை ரஞ்சனி. தமிழக அரசியல் நிகழ்வுகளை கவனித்து வந்தவர் தன் ஃபேஸ்புக்கில் ‘‘தமிழ்நாட்டில் நடக்கும் அரசியலைப் பார்க்கும் போது தமாஷாக இருக்கிறது,’’ என்று போஸ்ட் போட்டிருந்தார். அட என்னாச்சு உங்களுக்கு என்றபடி தொடர்பு கொண்டோம். ''நானே அரசியலுக்கு வந்திரலாமானு தோணுது'' என்கிறார்.

''கேரளாவின் இடுக்கி மாவட்டத்துல டீ எஸ்டேட்ல வேலை பார்க்குற பெண்கள் தங்களோட உரிமைக்காக 'பொம்பளை உரிமை அமைப்பு' என்கிற தலைப்பில் அமைப்பை உருவாக்கி அதன் சார்பாக போராடுகிறார்கள். அதை கேரளா அமைச்சர் எம்.எம்.மணி ''அவங்க காட்டுக்குள்ள கூத்தடிக்கிறாங்க''னு தொடங்கி... கலெக்டர், போலீசோடவும் அப்பெண்களை இணைச்சு கேவலமா பேசியிருக்கார். 

சாமான்ய மக்களே பேசக்கூடாத ஒரு வார்த்தையை, ஒரு உயர்ந்த பொறுப்புல இருந்துகிட்டு அவர் பேசினது ரொம்ப தப்பு. இவர் இந்த முறை மட்டும் இப்படி பேசலை... சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கூட்டத்தில் 'தேவைன்னா சி.பி.எம். கொலை செய்யவும் தயங்காதுன்னு'' சொல்லியிருக்கார். மக்களுக்காக வேலை பார்க்கிற ஒருத்தர் இப்படிப் பேசக் கூடாது. அவரோட கட்சியைச் சார்ந்தவங்களே இதை கண்டிச்சிருக்காங்க. அவரையெல்லாம் அமைச்சர் பதவியை விட்டு தூக்கியிருக்கணும். அமைச்சரா பதவி வகிக்கிறதுக்கே தகுதியற்றவர். 40 வருஷமா பார்ட்டியில இருக்கார்ங்கிற ஒரே காரணத்துக்காக ஒருத்தர் அமைச்சர் பதவி வகிக்க முடியுமா? ஆனா சி.பி.எம் அமைச்சர் மணியை அந்த லிஸ்ட்லதான் வைச்சிருக்காங்க.

ரஞ்சனி


இந்தியாவில் நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு, பெண்களை மதிக்கணுங்கிற விஷயம் பரவலாகிட்டு வருது. பெண்களைக் கேவலமாகப் பேசின அமைச்சரை முதல்வர் தண்டிக்கனும். "பொம்பளை உரிமைகள்" அமைப்புக்கு நான் என்னோட நூறுசதவிகித சப்போர்ட்டை கொடுக்கிறேன்" என்றவர் தமிழக அரசியல் பற்றி பேசினார்.

‘‘தமிழ்நாட்டில் என்ன நடக்குதுனே புரியல... அரசியலா நடக்குது. நடக்குறதை எல்லாம் பார்க்கிறப்ப தமாஷா இருக்கு.. சிரிப்பு தான்  வருகிறது. அரசியலுக்காக கோமாளித்தனம் பண்ற அரசியல்வாதிகளோட நடவடிக்கை வேதனையாவும், கோபத்தையும் ஏற்படுத்துது. ஊழல்ன்ற பேர்ல மாசத்துக்கு ஒருத்தர் கைதாகுறாங்க. இவங்க பண்ற கூத்து எல்லாம் எதிர்கால பிள்ளைகள் படிக்கிற புத்தகத்துல பாடமா வந்திருமோனு பயமா இருக்கு. சசிகலாவுல ஆரம்பிச்சு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி வரைக்கும் மக்கள் பிரச்னைகளப் பத்தி யோசிக்குறாங்களான்னா தெரியலைனுதான் பதில் சொல்ல வேண்டியதிருக்கு. தண்ணீர் பிரச்னை தலைவிரிச்சாடுது. டாஸ்மாக் பிரச்னை கோரத்தாண்டவமாடுது. ஆனா அதிமுகவோ இலையை எப்படி கைப்பற்றுவது, எப்படி பன்னீர்செல்வம் கூட கூட்டு வைக்கிறதுனு யோசிச்சுட்டு இருக்காங்க.

சமீபத்தில் செல்லூர் ராஜா வைகை அணைல தெர்மாக்கோல் போட்டு தண்ணீர் ஆவியாகாம தடுக்க முயற்சி பண்றார். அவர் பண்றது செந்தில் கவுண்டமி காமெடி மாதிரித்தான் இருந்தது. இவர் எப்படி மினிஸ்டர் ஆனார். இவரை எப்படி மக்கள் ஓட்டுப் போட்டு செலெக்ட் பண்ணினாங்க. தினமும் ஒரு காமெடியை பார்த்து பார்த்து சலிச்சுப்போய்... நானே அரசியலுக்கு வந்திரலாமானு தோணுது. நிஜமா நான் ஏன் பாலிடிக்ஸ் வரக்கூடாதுனு பல தடவை யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். 

அண்ணா, பெரியார்னு மக்களுக்கு உழைக்கிறதுக்காக ஆட்சிக்கும் அரசியலுக்கும் வந்தவங்க/வாழ்ந்தவங்க நாடு இது. அப்படிப்பட்ட பெருமையை கூறுப்போட்டு விக்கிறங்க  தமிழன்னு சொல்லவே மானம் போகுது. மக்கள் காசு வாங்கிட்டு ஓட்டுப் போட்டதுனாலதான் இப்படியான ஆட்கள் அரசியலுக்கு வர்றாங்க. இனிமேலாவது நமக்கு நல்லது பண்றவங்களை உணர்ந்து தேர்ந்தெடுத்தா நாடு உருப்படும். இல்லாட்டி ஆர்.கே.நகர்ல நடந்த மாதிரி தமிழ்நாடு முழுக்க நடந்து தேர்தல்லே நடக்காம போயிடும். 

செல்லூர் ராஜா தன்னோட அனுபவமில்லாத தகுதியை வைச்சுகிட்டு பல லட்ச ரூபாயை வீணடிச்சுட்டார். இதெல்லாம் மக்கள்பணம்தானே. திரும்ப தன் பாக்கெட்டுல இருந்து குடுப்பாரா சொல்லுங்க. சரியான அப்பா அம்மா இல்லைனா குழந்தைங்க தடம் மாறி போவாங்க. தமிழ்நாடும் சரியான லீடர்ஷிப் இல்லாம தன் போக்குல போய்கிட்டு இருக்குது. கூடிய சீக்கிரம் நல்ல நிலைக்கு திரும்பும். மக்கள் மனசு வைக்கணும்'’ என்று படபடவென பேசி முடித்தார் ரஞ்சனி.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்