வெளியிடப்பட்ட நேரம்: 17:17 (29/04/2017)

கடைசி தொடர்பு:17:17 (29/04/2017)

3000 ரூபாய் கொடுத்து உதவிய ஆட்டோ டிரைவர் - நெகிழும் பெண்!

ஆட்டோ டிரைவர்

ன்றைய பரபரப்பான சூழ்நிலையில், தெரிந்தவர் எதிரில் வந்தாலே, “நல்லா இருக்கீங்களா?” என்று கேட்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும்போது, ஓர் அவசரத் தேவையின்போது, யார் என்றே தெரியாத ஒருவர் உதவுவது எவ்வளவு பெரிய விஷயம்! அப்படி ஒரு நெகிழ்ச்சியான அனுபவத்தை ஆட்டோ டிரைவர் மூலமாகப் பெற்றிருக்கிறார் பெங்களூரைச் சேர்ந்த பாடகி வரிஜாஸ்ரீ வேணுகோபால். 


'நான் யார்... எங்கே இருக்கிறேன், என்ன வேலை பார்க்கிறேன் என்கிற எந்தவிதத் தகவலும் தெரியாமலே, என் அவசரமான சூழ்நிலையில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் 3000 ரூபாய் கொடுத்து உதவினார்' என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார் வரிஜாஸ்ரீ வேணுகோபால். அந்த போஸ்டுக்கு 'வாவ் வாட் ய மேன்' 'யூ லக்கி பேபி', என்று கமென்டுகள் நிறைய வரிஜாவின் போஸ்ட் அதிக ஷேர் செய்யப்பட்டது.

’அட! இது நல்ல விஷயமா இருக்கே’ என்று தொலைபேசியில் அவருடன் பேசினோம். நடந்த நிகழ்வைப் பற்றி கேட்கும்போதே நெகிழ்ந்து போனார் வரிஜாஶ்ரீ. 


”நான் பெங்களூர்வாசி. பாடகியான நான் இத்தாலியில் ஒரு மியூசிக் ஷோ பண்ணப்போறேன். அதுக்கான விசா இன்டர்வியூ ஏப்ரல் 11-ம் தேதிவரிஜாஸ்ரீ ஹைதராபாத்தில் நடந்தது. விசா இன்டர்வியூவுக்கு 5000 ரூபாய் ஆகும்னும், கிரெடிட், டெபிட் கார்டுகளை ஏத்துக்க மாட்டாங்கன்னும் தெரியும். கையில 2000 மட்டும்தான் இருந்தது. சரி ஏடிஎம்ல எடுத்துக்கிடலாம்னு கிளம்பிட்டேன். என்கிட்ட இருந்த பணத்தை வைச்சுக்கிட்டு ஹைதரபாத் போய்ட்டேன். அங்கிருந்து நேரா விசா ஆபீஸுக்கு கிளம்பினேன். டாக்சி பிடிக்கவும் நேரம் இல்லாம கிடைச்ச ஆட்டோவில் ஏறினேன். போற வழியில் பத்து, பதினைஞ்சு ஏ.டி.ஏம் மையங்களில் முயற்சி பண்ணினேன். எங்கேயும் வொர்க் ஆகலை. நொந்துபோய், ‘ஸ்வைப் மிஷின்' இருக்கும் கடைகளில் ஏறி இறங்கி, ‘எனக்கு அவசரமா 3000 ரூபாய் ’ஸ்வைப்’ பண்ணிக் கொடுங்க’ன்னு கேட்டேன். ஆனா, யாரும் உதவ முன்வரலை. இதையெல்லாம் பார்த்துட்டு இருந்த நான் டிராவல் பண்ணின ஆட்டோ டிரைவர், “என்கிட்ட 3000 ரூபாய் இருக்கு. உங்க விசா இன்டர்வியூவை நல்லபடியா முடிங்க. உங்க ஹோட்டலுக்கு திரும்பின பிறகு பணத்தைக் கொடுங்க'னு சொல்லி உதவினார். அதுக்கு அப்புறம், விசா இன்டர்வியூவை முடிச்சுட்டு அவருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்தேன். அவர் பேர் பாபா. இந்த உலகம் இன்னமும் உயிர்ப்போடு இருக்க இதுபோன்ற மனிதர்கள்தான் காரணம். கைமாறு எதையும் எதிர்பார்க்காமல் சமயத்தில் உதவின அவருக்கு நன்றி சொல்லவே அவரோடு செல்ஃபி எடுத்து, ஃபேஸ்புக்ல ஷேர் பண்ணிக்கிட்டேன்.” என்று நெகிழ்கிறார் வரிஜாஸ்ரீ. 


இந்த சம்பவத்தை,  வரிஜாஸ்ரீ  ஃபேஸ்புக்கில்  பதிவிட, அது காட்டு தீப்போல் பரவி,  பலரது உள்ளங்களையும் நெகிழ வைத்திருக்கிறது. மேலும், 7 ஆயிரத்திற்கு  மேற்பட்டவர்கள் அதனை ஷேர் செய்தியிருக்கிறார்கள். ”முதல்ல,  இது வைரலாகும்னு நான் நினைக்கலை. ஆனா, இதைப் படிக்கும் நாலு பேருக்குள்ள மாற்றம் வந்தாலும் சந்தோஷமே. நாம இக்கட்டான சூழ்நிலையில இருக்கிறப்ப நமக்கு அறிமுகமில்லாதவங்க உதவி செய்வாங்க. அவங்க எல்லாரும் நமக்கு கடவுள்தான். எனக்கு பாபா மாதிரி”, என்று மகிழ்ச்சியாக கூறுகிறார் வரிஜாஸ்ரீ. இவர் கூறிய வார்த்தைகள் சாத்தியமானால், இந்த உலகம் அன்பாலானதாகிவிடும்.


மனிதர்கள் மீது நம்பிக்கையை விதைத்த பாபாவுக்கும், அதை மறக்காமல் பதிவிட்ட வரிஜாஸ்ரீ வேணுகோபாலுக்கும் அன்பு வாழ்த்துகள்! இதை படிக்கும் நீங்களும் உங்களாலான  உதவியை, முகம் தெரியாதவர்களுக்கு உள்ளம் மகிழ்ந்து செய்யுங்கள்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்