'நீட்' தேர்வு மையப் பரிசோதனைகள் யார் மீது பிழை...? #VikatanSurvey

'நீட்' தேர்வு

ருத்துவப் படிப்பில் மாணவ-மாணவிகள் சேர்வதற்கான 'நீட்' எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு தமிழகம் உள்பட நாடு முழுவதும் நேற்று (7.5.2017) நடைபெற்றது. மொத்தம் 104 இடங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், தமிழகத்தில் 'நீட்' தேர்வை நடத்தக் கூடாது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்கச் சென்ற மாணவ- மாணவிகளை சோதனை என்ற பெயரில் தேர்வுமைய கண்காணிப்பாளர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். அதன் பின்னரே தேர்வுக்கூடங்களுக்குள் அனுமதித்தனர். இந்தச் செயல் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 'நீட்' தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்ப படிவங்களிலேயே, தேர்வு நடைபெறும் நாளன்று செய்யக் கூடாத விஷயங்கள் என்று சில குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. அதன் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டது. முழுக்கை சட்டையுடன் வந்த மாணவர்களின் சட்டை மற்றும் முழுக்கையுடன் கூடிய சுடிதார் அணிந்து வந்த மாணவிகளின் சுடிதார் கை, அரைக்கைகளாகக் கிழிக்கப்பட்டன. மாணவிகள் அணிந்திருந்த பூ மற்றும் தோடு, மூக்குத்தி போன்ற ஆபரணங்களுக்கும் தடை விதிக்கப்பட்டன. கேரளாவில் ஒருபடி மேலே சென்று, மாணவி ஒருவரின் உள்ளாடையையும் கழற்றச் செய்த சம்பவம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 'நீட்' தேர்வு தொடர்பான கட்டுப்பாடுகள் பற்றிய உங்கள் கருத்தை தெரிவிக்க இந்த சர்வேயில் கலந்து கொண்டு பதிலளியுங்கள்...

loading...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!