Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வீடியோ சர்ச்சையில் ஜெயசூர்யா!

 

ஆல்ரவுண்டரான ஜெயசூர்யா, ஒரு நடிகையுடன் இருக்கும் காட்சிகள் வீடியோவாக, சோஷியல் மீடியாக்களில் இப்போது வைரலாகி வருகிறது. வீடியோவில் ஜெயசூர்யாவுடன் இருப்பவர், மலீகா சிரிசேனா என்னும் நடிகை என்கிறார்கள். இவர், ஜெயசூர்யாவின் முன்னாள் காதலி. ‘‘இதைப் படம் எடுத்ததே ஜெயசூர்யாதான். திட்டமிட்டே இதை அவர் பப்ளிசிட்டி பண்ணியிருக்கிறார். அவரை நான் சும்மா விடமாட்டேன் ’’ என்று புகார்ப் பத்திரத்துடன் ஸ்டேஷன் படி ஏறியிருக்கிறார் மலீகா. 

ஶ்ரீலங்கா கிரிக்கெட் உலகத்திலும் பரபரப்பு கிளப்பியிருக்கிறது இந்த வீடியோ. "ஜெயசூர்யா, ஸ்ரீலங்கா கிரிக்கெட் போர்டிலிருந்து விலக வேண்டும். நம் நாட்டுக்கும் கிரிக்கெட்டுக்கும் இழிவு ஏற்படுத்திவிட்டார்.’’ என்று கருத்து கூறி இருக்கிறார் ஸ்ரீலங்கா கிரிக்கெட் போர்டின் அதிகாரி ஒருவர்.

அதிரடி ஆட்டக்காரரான ஜெயசூர்யா, கிரிக்கெட்டில் இதுவரை டெஸ்ட் மேட்ச்களில் 6,000 ரன்களும் ஒரு நாள் போட்டிகளில் 13,000 ரன்களுக்கு மேலும் ஸ்கோர் செய்திருக்கிறார். ஒரு நாள் போட்டிகளில் மட்டும் 323 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். 

சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டிக்காக, இலங்கை அணியுடன் இங்கிலாந்தில் இருக்கும் ஜெயசூர்யா, இந்த வீடியோ சர்ச்சை பற்றி இதுவரை எந்த கமென்ட்டும் சொல்லவில்லை. இந்த வீடியோ பிரச்னையால், கிரிக்கெட் போர்டின் சீஃப் செலக்டர் பதவியை அவர் இழக்கும் அபாயம் உள்ளது என்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close