வெளியிடப்பட்ட நேரம்: 13:29 (27/07/2017)

கடைசி தொடர்பு:13:42 (27/07/2017)

குழந்தைகளை நேசித்த ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் #puzzle

தமிழகத்தின் பெருமையை உயர்த்தியவர்களில் முக்கியமானவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம். அறிவியலாளரான இவர் இந்தியாவின் முதல் குடிமகனாகப் பதவி வகித்தார். குழந்தைகளை நேசித்த ஜனாதிபதி என்றும் இவரைப் பெருமையுடன் கூறலாம். ஏனெனில், தான் செல்லும் ஊர்களில் உள்ள பள்ளிகளுக்குத் தவறாமல் சென்றவர். தனது கனவுகளை விதைக்கச் சரியான இடம் குழந்தைகளின் மனங்கள்தாம் எனத் தெளிவாக உணர்ந்தவர். மாணவர்களுடன் உரையாட நேரம் ஒதுக்குவதற்கு இவர் தயங்கியதே இல்லை. நாட்டின் ஏதோ ஒரு மூலையிலிருந்து ஒரு மாணவர் கடிதம் எழுதியிருந்தாலும் பொறுப்புடன் அவருக்குப் பதில் கடிதம் எழுதுவதை ஒருநாளும் அவர் ஒத்தி வைத்ததேயில்லை. மாணவர்களுக்கு இவரின் பெயரைக் கேட்டாலே புத்துணர்வு கொள்வர். 

அப்துல் கலாம் படம் இல்லாத பள்ளிகளே இல்லை என்றே சொல்லுமளவுக்கு மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கும் உத்வேகத்தை அளித்தவர். அவரின் படத்தை வைத்துப் புதிர் ஒன்றை விளையாடலாமா! ஒன்பது துண்டுகளை இணைத்தால் அப்துல் கலாமின் உருவம் கிடைக்கும்.  ரெடி ஸ்டார்ட்! 

loading...

வடிவமைப்பு: ஆர்.ராஜூ