Published:Updated:

குப்பையை சுத்தம்செய்யும் நாசர்! வைரலான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

குப்பையை சுத்தம்செய்யும் நாசர்! வைரலான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ
குப்பையை சுத்தம்செய்யும் நாசர்! வைரலான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

குணச்சித்திர நடிகர் நாசர், தன் ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ள குப்பையை சுத்தம்செய்யும் காட்சிகள், சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் நாசர். எதிர்மறை கதாபாத்திரத்தின்மூலம் தன் சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பல சிறந்த திரைப்படங்களில் தன் தனிப்பட்ட நடிப்பின்மூலம் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். நடிப்பைத் தவிர திரைக்கதை, வசனம், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது இவர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

இந்நிலையில், நாசர் அடுத்ததாக நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ள குப்பையை சுத்தம்செய்யும் வீடியோ, தற்போது அதிகம் பகிரப்பட்டுவருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் சிதறிக் கிடக்கும் காபி கப்புகளை ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரித்து, அதை குப்பைத்தொட்டியில் போடுகிறார். அப்போது, யாரோ ஒருவர் உதவி செய்ய வருகிறார். ஆனால், அவரை நாசர் கடிந்துகொள்கிறார். இந்த வீடியோ, நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் நாசரின் செயலைப் பாராட்டிவருகின்றனர்.

Video Credits : Chennai Guy