Published:Updated:

‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்!’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி 

‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்!’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி 
‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்!’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி 

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்-ஸின் மனைவி அம்ருதா, சொகுசுக் கப்பலின் ஆபத்தான பகுதியில் சென்று செல்ஃபி எடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசுக் கப்பல் போக்குவரத்து மும்பை கடல் பகுதியில் தொடங்கிவைக்கப்பட்டது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கிவைத்தனர். மும்பை -கோவா இடையே இந்தக் கப்பல் இயக்கப்படுகிறது. 399 பயணிகள் இந்தக் கப்பலில் பயணிக்கலாம். வாரத்துக்கு நான்கு முறை மட்டுமே இந்தக் கப்பல் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இவ்விழாவில், தேவேந்திர பட்னாவிஸ்-ஸின் மனைவி அம்ருதாவும் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் நடந்துகொண்ட விதம்தான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. அம்ருதா சொகுசுக்கப்பலைக் கண்டதும் அதன் மீது ஏற்பட்ட பிரியத்தால் செல்ஃபி எடுத்த வண்ணம் இருந்தார். ஒரு கட்டத்தில் பாதுகாப்பையும் மீறி, கப்பலின் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் சென்றார். கடல் அலைகள் உரசும் அடிப்பகுதியின் நுனியில் அமர்ந்தவாறு செல்ஃபி எடுக்க முற்பட்டார். இதைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள், அங்கிருந்து வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர், செல்ஃபி எடுப்பதிலே மும்முரமாக இருந்தார். பெண் அதிகாரி ஒருவர் தலையில் அடித்துக்கொண்டார். இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.