Published:Updated:

`தாய்ப்பாசம்;கடமையுணர்வு’ - பெண்காவலரின் வியக்கவைக்கும் புகைப்படம்!

`தாய்ப்பாசம்;கடமையுணர்வு’ -  பெண்காவலரின் வியக்கவைக்கும் புகைப்படம்!
`தாய்ப்பாசம்;கடமையுணர்வு’ - பெண்காவலரின் வியக்கவைக்கும் புகைப்படம்!

பெண் காவலர் ஒருவர் தனது குழந்தையை அருகிலுள்ள டேபிள் ஒன்றில் படுக்கவைத்துவிட்டு, தனது பணிகளை மேற்கொள்ளும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தனது வேலையையும் விட்டுக்கொடுக்க முடியாது. அதேபோல குடும்பத்தையும் கவனித்துக்கொள்ள வேண்டும். இப்படியாய் சிக்கலான வாழ்க்கை போராட்டத்தில் பெண்கள் பயணித்துக்கொண்டுள்ளனர். இத்தகைய சவாலான சூழலை பெண்கள் மிகவும் லாவகமாக எதிர்கொள்கின்றனர். அவர்கள் எதிர்கொள்ளும் விதம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சமூகவலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. பெண் காவலர் ஒருவர் தனது குழந்தையை அருகிலுள்ள டேபிளில் படுக்க வைத்துள்ளார். அந்தக் குழந்தைக்கு அருகில் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, தனது பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஆய்வாளர் நவ்தீத் சேக்ரா என்பவர் இந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர், `நம்பமுடியவில்லை! இதற்கு எந்த கேப்ஷனும் தேவையில்லை’ எனப் பதிவிட்டுள்ளார். அந்தப் பெண் காவலர் பெயர் அர்ச்சனா என்றும், அவர் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோட்வாலி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்தப் பெண் காவலருக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.