Published:Updated:

`இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்!'‍ `தீ'க்கு நடுவே பயணித்த அமெரிக்கப் பெண்ணின் திகில் அனுபவம்

ராம் பிரசாத்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 3 இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.  ஊஸ்லி காட்டுத்தீயில் இருந்து தப்பித்த பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. காட்டுத் தீக்கு இடையே தன் உயிரைக்  கையில்  பிடித்துக்கொண்டு  பயணம்  செய்துள்ளார்  ரீபேக்கா என்ற அந்தப் பெண். இதை அவர்

`இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்!'‍ `தீ'க்கு நடுவே பயணித்த அமெரிக்கப் பெண்ணின் திகில் அனுபவம்

வீடியோவாக எடுத்துள்ளார். இந்த  வீடியோவில் பதிவாகியுள்ள காட்சியில், தேசிய நெடுஞ்சாலையில் அந்தப் பெண்மணியின் கார் பயணிக்கிறது. சாலையின் இருபுறங்களிலும் தீப்பற்றி எரிகிறது. செடிகள், மரங்கள் எல்லாம் தீக்கு இரையாகிக்கொண்டிருக்கின்றன.

அந்தக் கார் ஒரு சுரங்கப்பாதைக்குள் செல்கிறது. இருள் சூழ்ந்து காணப்படுகிறது. வாகனத்தின் வெளிச்சம் சாலையின் ஊடாகப் பரவுகிறது. கார் சீரான வேகத்தில் பயணிக்கிறது. நெடுந்தூரத்தில் அதிகாலையில் சூரியன் உதிப்பது போன்று தெரிகிறது. வாகனம் அந்த வெளிச்சத்தை நோக்கி விரைகிறது. சுரங்கப்பாதையின் மறுபக்கம் அது. அந்தப்பக்கம் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. தீப்பிழம்புகள்தான் சூரிய உதயம் போல் காட்சியளித்திருக்கிறது. இதைக்கண்டதும் அந்தப்பெண் பயத்தில் கூச்சலிடுகிறார். அந்தத் தீப்பிழப்புகளுக்கிடையே தொடர்ந்து பயணிக்கிறார். சாலைகளின் இருபுறங்களிலும் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. வேகமாக வீசும் காற்று தீப்பிழம்புகளை வாகனத்தின் மீது வீசிச்செல்கிறது. ஒருவழியாக அவர் அந்தக் காட்டுத்தீயில் இருந்து எவ்வித சேதமுமின்றி தப்பிவிட்டார்.

இதுகுறித்து அந்தப்பெண் கூறுகையில், ``நான் என் வாழ்க்கையில் அப்போதுதான் ஒரு வலுவான காற்றை உணர்ந்தேன். நெருப்பு மிக விரைவாக வந்தது. எனவே, நாங்கள் வெளியேற வேண்டியிருந்தது. தீப்பிழம்புகளுக்கிடையே இரண்டு நிமிடங்கள் காரில் பயணம் செய்திருப்பேன். நான் இறந்துவிடுவேன் என்றுதான் நினைத்தேன். நல்ல வேளையாக உயிருடன் இருக்கிறேன்'' என்றார்.