Published:Updated:

`நண்பர்களுக்குத் தடபுடல் விருந்து!'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்

`நண்பர்களுக்குத் தடபுடல் விருந்து!'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்
`நண்பர்களுக்குத் தடபுடல் விருந்து!'- விவாகரத்தை வெடிவெடித்துக் குடும்பத்துடன் கொண்டாடிய பெண்

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது விவாகரத்தை நண்பர்களுக்கு விருந்து அளித்து கொண்டாடியுள்ளார். 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் kimberly santleben Stiteler. தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக நீதிமன்றம் விவாகரத்து கொடுத்துள்ளது. இதைக் கொண்டாட வேண்டும் எனத் தனது குடும்ப உறுப்பினர்களிடம் அந்தப் பெண்மணி தெரிவித்துள்ளார். மேலும் திருமண நாளில் தான் அணிந்த உடையை எரித்துவிடப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். விவாகரத்து பெற்றதைக் கொண்டாடும் விதமாகத் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்துள்ளார். அப்போது தனது திருமண உடையில் வெடிப்பொருள்கள் நிரம்பி வெடிக்கச்செய்துள்ளார். தனது திருமண உடை வெடித்துச்சிதறும் காட்சியை தூரத்திலிருந்து உற்சாகமாகக் கண்டுகளித்துள்ளார். இந்த வெடிச்சத்தம் பல மைல்களுக்கு அப்பால் கேட்டது. இந்தக் காட்சிகளை அந்தப் பெண் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக kimberly santleben Stiteler சகோதரி ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ``எனது சகோதரிக்குக் கடந்த நவம்பர் 9-ம் தேதி விவாகரத்து கிடைத்தது. தனது திருமண ஆடையை எரிக்க வேண்டும் என அவள் விரும்பினாள். அவளது ஆசைப்படி ஆடையை எரிக்க எனது தந்தை ஏற்பாடு செய்தார்.  

விவாகரத்தைக் கொண்டாடும் விதமாக எங்களது பண்ணை வீட்டில் நண்பர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பண்ணையின் நடுவே வெடிப்பொருள்களால் நிரப்பப்பட்ட திருமண ஆடை வைக்கப்பட்டது. 100 அடி தூரத்தில் நாங்கள் விலகி இருந்தோம். துப்பாக்கியால் அதை குறிபார்த்து கிம்பர்லி சுட்டாள். அவள் இதற்கு முன்பு துப்பாக்கியைக் கையாண்டது இல்லை. இதற்காக எனது கணவரிடம் பயிற்சி பெற்றாள். முதல் முயற்சியிலேயே இலக்கைச் சரியாகக் குறிபார்த்து சுட்டுத் தள்ளினார். வெடிப்பொருள்களால் நிரப்பப்பட்ட திருமண ஆடை பல வண்ணங்களில் வெடித்துச் சிதறியது” என்றார்