Published:Updated:

`என் புதிய உலகம்!’ - குழந்தையை அரவணைக்கும் சானியா மிர்சா #ViralPhoto

`என் புதிய உலகம்!’ - குழந்தையை அரவணைக்கும் சானியா மிர்சா #ViralPhoto
`என் புதிய உலகம்!’ - குழந்தையை அரவணைக்கும் சானியா மிர்சா #ViralPhoto

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தன் குழுந்தையை அரவணைத்தபடி இருக்கும் புகைப்படம் செம வைரல். இந்தப் புகைப்படம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சானியா மிர்சா நெகிழ்ச்சியான கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். `தனது புது உலகம்’ என இதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் தம்பதி கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவரை திருமணம் செய்துகொண்டதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. திருமணத்துக்குப் பின்னும் இந்தியாவுக்காக விளையாடுவேன் என சானியா உறுதியளித்திருந்தார். இதனிடையே கடந்த 30-ம் தேதியன்று இந்தத் தம்பதிக்கு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்தவுடன் சோயப் மாலிக், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``இதை தெரிவிக்க நாங்கள் மிகவும் உற்சாகமாக உள்ளோம். எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. என் மனைவி எப்போதும்போல வலிமையுடன் இருக்கிறார். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார். அவர்கள் தங்கள் குழந்தைக்கு `இஸான்’ எனப் பெயரிட்டனர். இதற்கு அரபு மொழியில் கடவுளின் பரிசு என அர்த்தமாம். இந்த நிலையில், குழந்தையை அரவணைத்தபடி இருக்கும் சானியா மிர்சாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள இந்தப் படத்துக்கு 2.6 லட்சத்துக்கும் மேல் லைக்குகள் குவிந்து வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#Moments #Allhamdulillah

A post shared by Sania Mirza (@mirzasaniar) on