Published:Updated:

ஒரு வீடியோ ஓர் உயிரையும் காக்கும்! - ஜின்ஷா பஷீர்

ஒரு வீடியோ ஓர் உயிரையும் காக்கும்! - ஜின்ஷா பஷீர்
பிரீமியம் ஸ்டோரி
ஒரு வீடியோ ஓர் உயிரையும் காக்கும்! - ஜின்ஷா பஷீர்

சோஷியல் மீடியா என்பது சூப்பர் கருவிஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்

ஒரு வீடியோ ஓர் உயிரையும் காக்கும்! - ஜின்ஷா பஷீர்

சோஷியல் மீடியா என்பது சூப்பர் கருவிஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்

Published:Updated:
ஒரு வீடியோ ஓர் உயிரையும் காக்கும்! - ஜின்ஷா பஷீர்
பிரீமியம் ஸ்டோரி
ஒரு வீடியோ ஓர் உயிரையும் காக்கும்! - ஜின்ஷா பஷீர்

“சோஷியல் மீடியாவை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்தி மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்துவது, தேவை இருப்பவர்களுக்கு உதவுவது என ஆக்கபூர்வமான விஷயங்களைச் செய்துவருவதில் மிக மகிழ்ச்சி’’ என்று பெருமையுடன் சொல்கிறார் ஜின்ஷா பஷீர். இவர் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் பணியை உதறிவிட்டு, சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவிடும் வி-பிளாகிங் (Video Blogging) டெக்னாலஜி மூலம், ஆறு மாதக் காலத்துக்குள் உலக அளவில் கவனம் ஈர்த்திருப்பவர்!

கேரளா, ஆலப்புழையில் வசிக்கும் இவரிடம் பேசினோம். ‘`ஒருமுறை என் இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பியபோது, பங்க்கில் பணிபுரிந்த ஊழியர் அளவையில் மோசடி செய்தார். அதைக் கண்டுபிடித்து பங்க் உரிமையாளரிடம் புகார் செய்தேன். ‘இது எல்லா பங்க்கிலும் வழக்கமாக நடப்பது தானே? கண்டுகொள்ளாமல் சென்று விடுங்கள்’ என்று ‘அறிவுரை’ கூறினார். ஆனால், நான் அதை வீடியோவாக எடுத்து முகநூலில் பதிவிட்டேன். `இதுகுறித்து யாரும் ஏன் தட்டிக்கேட்பதில்லை?' என மக்கள் மனதில் ஒரு கேள்வியை எழுப்பினேன். சில மணி நேரத்துக்குள் 5,000-க்கும் மேற்பட்டோர் அந்த வீடியோவை லைக் செய்ய, பல்லாயிரக் கணக்கானோர் அதை ஷேர் செய்ய, அது அன்று வைரல் ஆனது.

ஒரு வீடியோ ஓர் உயிரையும் காக்கும்! - ஜின்ஷா பஷீர்

தொடர்ந்து, மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், சமூக அவலங்கள், அதற்கான தீர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள், அரசின் சட்ட விதிகளை உரிய முறையில் பயன்படுத்தி நலத்திட்ட உதவிகளைப் பெறும் வழி, ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான உதவி என ஒன்றன் பின் ஒன்றாக 150-க்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பதிவிட்டேன்’’ என்கிறவர், சோஷியல் மீடியாவில் மிகவும் பிரபலமாகியிருக்கிறார். ஒரு சமூக சேவை அமைப்பு, ‘பெஸ்ட் சோஷியல் மீடியா அவார்டு 2018’ விருதை ஜின்ஷாவுக்கு வழங்கியுள்ளது.

‘`நான் சார்ந்திருக்கும் மதத்திலிருந்து பலரும் என்னை விமர்சித்தனர். நான் மத நம்பிக்கைக் கொண்டவள். ஆனால், சமூக அவலங்கள் குறித்துப் பெண்கள் கருத்து தெரிவிக்கக் கூடாது என எந்த மதமும் போதிக்கவில்லை. சமூக அவலங்களைத் தோலுரித்துக்காட்டுவதில் பெண்களும் பங்குகொள்வதில் என்ன தவறு? என் வீடியோக்களைப் பார்த்துவிட்டு, என் நெருங்கிய தோழிகள்கூட என்னை அன் ஃப்ரெண்ட் செய்தபோது அதிர்ச்சியாகி யிருக்கிறேன். என் தாயும் சகோதரிகளும்கூட எதிர்ப்பு தெரிவித்தனர். செலிபிரிட்டி ஆசை என்னை ஆட்கொண்டு விட்டதாக வசைபாடினர். ஆனால், என் வீடியோ ஒன்றின் பலனாகப் பலரும் மனமுவந்து நன்கொடை அளித்தனர்.

அப்படி 30 லட்சம் ரூபாய் வசூல் செய்து, மலப்புரத்தில் வசிக்கும் ஆயிஷா என்ற ஒன்றரை வயது குழந்தைக்கு எலும்பு நோயைக் குணப்படுத்தினோம். அந்த மழலை யின் சிரிப்பைக் கண்டபோது, எதிர்ப்புகளையெல்லாம் புறந்தள்ளி என் பணியைத் தொடர உறுதி பூண்டேன். அப்பாவும் கணவரும் எப்போதும் எனக்குப் பலமாக இருந்தார்கள்’’ என்கிறவர், `பவர் ஆஃப் சோஷியல் மீடியா' பற்றிப் பேசினார்.

``தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உரிய முறையில் பயன்படுத்தினால், அரசு ஊழியர்களை உரிய காலத்துக்குள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வைக்க முடியும். இவற்றையெல்லாம் பொதுமக்களிடம் கொண்டுசெல்ல, சோஷியல் மீடியா என்ற சூப்பர் கருவியைப் பயன்படுத்துகிறேன். தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பலர் தங்களுடன் இணைந்து பணிபுரிய என்னை அணுகினர். எனக்கு அதில் விருப்பமில்லை. என் முயற்சியின் பலன் முழுக்க  மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதே என் நோக்கம். பொருளாதார உதவி கேட்டு யார் என்னை அணுகினாலும் விசாரித்து, பரிசீலித்து, பின்னர்தான் வீடியோ பதிவிடுவேன்’’ என்கிறவரின் இணைய வளர்ச்சி, `வாவ்’ சொல்ல வைக்கிறது. ஆறு மாதங்களுக்குள் 3,36,000-க்கும் அதிகமானவர்கள் இவரது முகநூல் பக்கத்தில் உறுப் பினர்களாகியுள்ளனர். 52,000-க்கும் அதிகமானோர் யூடியூபில் இவரது வீடியோக்களைப் பார்க்கிறார்கள். ஜின்ஷா ஃபேன் கிளப் உறுப்பினர் களின் எண்ணிக்கை 30,000-க்கும் அதிகம்.

``இந்த எண்ணிக்கை அனைத்தை யும், சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என் நோக்கத்தை நோக்கி நகர்த்துகிறேன். தொடர்ந்து பயணிப்பேன் மக்களுக்கான வளாக!” என்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!