Published:Updated:

வாவ்... 14,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங்! - அசால்ட் செய்த 102 வயது மூதாட்டி

வாவ்... 14,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங்! - அசால்ட் செய்த 102 வயது மூதாட்டி
வாவ்... 14,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங்! - அசால்ட் செய்த 102 வயது மூதாட்டி


சாதிக்க வயது ஒரு தடையே இல்லை என்பதை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி ஐரின் ஓ ஷெயா  (Irene O’Shea ) நிரூபித்துள்ளார்.  அடிலெய்டைச் சேர்ந்த இந்தப் பெண்மணி, 14,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்துள்ளார். மிக அதிக வயதில் ஸ்கை டைவிங் செய்த பெண்மணி என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். ஏதோ சாதனைக்காக இதைச் செய்யவில்லை. Motor Neurone  என்ற நோய்குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதற்காகவே அவர் இவ்வாறு செய்துள்ளார். ஐரினின் 67 வயது மகள், கடந்த 10 வருடங்களுக்கு முன்  Motor Neurone என்ற நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். 

ஐரின், தனது 100-வது பிறந்தநாளில் முதன் முதலாக ஸ்கை டைவிங் செய்துள்ளார். இதையடுத்து, தற்போது மூன்றாவது முறையாக விண்ணில் இருந்து குதித்துள்ளார். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் என 50 பேர் முன்னிலையில் இதைச் செய்துள்ளார்.

இதுகுறித்து ஐரின் கூறுகையில், “ எனது மகளின் இழப்பு என்னை வாட்டுகிறது. ஒரு கடுமையான நோயால் அவள் 10 வருடங்களுக்கு முன் உயிரிழந்துவிட்டாள். அடுத்த வருடமும் நான் ஸ்கை டைவிங் செய்வேன். இன்னும் நீண்ட நாள் நான் உயிரோடு இருந்தால் என்னுடைய 105 வயதிலும் விண்ணில் இருந்து குதிப்பேன். ஸ்கை  டைவைச் செய்யும்போது எப்போதும் போலத்தான் இருந்தேன். கடந்த முறை எப்படி இருந்தேனோ அதே உணர்வுதான் இப்போதும் இருந்தது” என்றார்.

 Motor Neurone Disease Association of South Australia என்ற  மையத்துக்கு நிதிதிரட்டுவதற்காக அவர் இந்த ஸ்கை டைவிங்கை மேற்கொண்டுள்ளார். இதன்மூலம் 12,000 டாலர் நிதி திரட்டியுள்ளார். தன்னுடைய அடுத்தடுத்த முயற்சிகள்மூலம் மேலும் நிதிதிரட்ட முடியும் என நம்புகிறார். ஐரினுக்கு 5 பேரக்குழந்தைகள், 11 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்.